சரிந்து விழுந்த கட்சிக் கொடிகம்பம்! சுபஸ்ரீ போல் விபத்தில் சிக்கிய பெண்!

உள்ளூர் செய்திகள் கோவை பொது தகவல்கள்
anuradha - 2026

கோவை சிங்காநல்லூரை சார்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அனுராதா வழக்கம் போல நேற்று காலை வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அனுராதா கோல்டுவின்ஸ் பகுதியில் செல்லும் போது கட்சி கொடி கம்பம் விழுந்து உள்ளது. இதனால் அனுராதா பிரேக் அடித்து உள்ளார். அப்போது நிலை தடுமாறி அனுராதா சாலையில் கீழே வீழ்ந்து உள்ளார்.

அதே வழியாக வந்த லாரி ஓன்று அனுராதா காலில் ஏறியதாக கூறப்படுகிறது.

உடனே அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து காலில் அறுவை சிகிக்சை நடைபெற்று உள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை அரசியல்கட்சி பிரமுகர் வீட்டு திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணத்திற்காக அப்பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டு ,கொடி கம்பம் வைக்கப்பட்டு உள்ளது.

அந்த கொடிக்கம்பம் அதிமுக கட்சி உடையது எனவும், அந்த கொடிக்கம்பம் அதிமுக கட்சி உடையது எனவும், விபத்து நடந்த பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அ.தி.மு.க கொடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன.

அந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணமெனவும், அதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.