அந்த 5 ஏக்கர் நிலமும், ராமஜன்ம பூமியின் 67 ஏக்கர் நிலத்துக்குள்தான் வேண்டுமாம்! பிரச்னையைக் கிளப்பும் முஸ்லிம்கள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ayodhi3 - 2026

முஸ்லீம் வழக்குரைஞர்கள் ‘லாலிபாப்’ தின்ன விரும்பவில்லை, ராமஜன்மபூமியின் 67 ஏக்கருக்குள் 5 ஏக்கர் நிலத்தை கோருகிறார்கள்.

அயோத்தி வழக்கின் முக்கிய வழக்குரைஞரான இக்பால் அன்சாரி, முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை ராம் ஜன்மபூமிக்கு வழங்கப்பட்ட 67 ஏக்கர் நிலத்தில் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

சனிக்கிழமையன்று ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் 67 ஏக்கர் நிலத்தை இந்துக்களுக்கு அளித்தது. அந்த இடத்தில் கோவிலை இடித்தே பின்னர் சர்ச்சைக்குரிய கட்டடம் கட்டப்பட்டது என்று கூறியது. எனவே அந்த இடத்தை இந்துக்களுக்கு கோயிலைக் கட்டுவதற்காக அளிப்பதாகக் கூறியது.

ayodhi2 - 2026

மேலும், ஆக்கிரமிப்பு நடத்தி இருந்த கோயிலை இடித்து இந்துக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை பறித்துக் கொண்ட முஸ்லிம்களை சமாதானப் படுத்தும் விதமாக, அயோத்தியில் பிரதான இடத்தில் 5 ஏக்கர் நிலம், மசூதி கட்டிக் கொள்வதற்காக வழங்க வேண்டும் என்றும் கூறியது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசு தங்களுக்கு நிலத்தை வழங்க வேண்டுமென்றால், “அது தங்களின் வசதிக்கேற்ப இருக்க வேண்டும், ராமஜன்ம பூமிக்காக ஒதுக்கிய அந்த 67 ஏக்கர் நிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்” என்று அன்சாரி மற்றும் பல முஸ்லிம் தலைவர்களுடன் கோரியுள்ளார். அவர்களின் கோரிக்கைகளின்படி நிலம் ஒதுக்கப்படாவிட்டால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்.

ayodhya - 2026

உள்ளூர் மௌலானா ஜலால் அஷ்ரப் கூறுகையில், முஸ்லிம்கள் ஒரு மசூதியைக் கட்டியெழுப்ப தங்கள் சொந்த நிலத்தை வாங்கும் திறன் கொண்டவர்கள், அதற்காக அரசாங்கத்தை நம்பியிருக்கவில்லை. இருப்பினும், ‘அவர்களின் உணர்வுகளை ஓரளவிற்கு சமாதானப்படுத்த’, இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட 67 ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்கப்பட வேண்டும்! ஏனெனில் அந்த நிலத்தில் பல ‘கப்ரிஸ்தான் (கல்லறைகள்) மற்றும் தர்காக்கள்’ உள்ளன.

அகில இந்திய மில்லி கவுன்சில் பொதுச் செயலாளரும், பாபரி வழக்கில் முஸ்லிம்களின் தரப்பில் இருந்து வழக்குத் தொடுத்தவருமான கலிக் அகமது கான் கூறுகையில், 67 ஏக்கருக்குள் 16 பிளாட்களை அரசாங்கம் எங்களுக்கு வழங்க வேண்டும், அதில் ‘கல்லறை’ மற்றும் ஒரு ‘தர்கா’ உள்ளன என்று கூறியுள்ளார்.

முஸ்லீம் தரப்பைச் சேர்ந்த மற்றொரு வழக்குரைஞர், ஹாஜி மஹ்பூப், ஐந்து ஏக்கர் நிலத்தை ‘லாலிபாப்’ போல கொடுக்கப் பட்டதைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்.

ayodhi1 - 2026

பாபரி மஸ்ஜிதுக்கு பதிலாக வழங்கப்படும் இந்த ‘நன்கொடை’ தங்களுக்கு பிடிக்காது என்று அயோத்தி முனிசிபல் கார்ப்பரேட்டர் ஹாஜி ஆசாத் அகமது தெரிவித்தார்.

“நீதிமன்றமோ அல்லது அரசாங்கமோ எங்களுக்கு நிலம் கொடுக்க விரும்பினால், அது 67 ஏக்கர் நிலத்தில் இருக்க வேண்டும் அல்லது நாங்கள் அதை விரும்பவில்லை” என்று அவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.யிடம் தெரிவித்துள்ளார்.

இந்த உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில், ஜாமியத் உலமா ஹிந்தின் அயோத்தியாவின் தலைவர் மௌலானா பாட்ஷா கான், இந்தச் சண்டை பாபரி மஸ்ஜிதிற்காகவே தவிர வேறு எந்த நிலத்துக்காகவும் இல்லை! எனவே அவர்கள் மசூதிக்கு எந்த நிலத்தையும் விரும்பவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய (ஏஐஎம்பிஎல்பி) உறுப்பினர்களின் கூட்டம் நவம்பர் 17 ஆம் தேதி எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.