திருச்சியில், காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் இளம் கர்ப்பிணிப் பெண் கீழே விழுந்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக எழுந்துள்ளன. காவலருக்கு அபராதம் போடத்தான் உரிமையே தவிர, இப்படி வேண்டுமென்றே காட்டுமிராண்டித் தனமாக எட்டி உதைத்து பொதுமக்களை மிரட்டும் உரிமை இல்லை என்று தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர் பலர். அவர்களில் ஒருவரின் கருத்து இது… வாட்ஸ் அப் தளத்தில் வைரலாகி வரும் கருத்து…
ஒரு போலீஸ் காரன் சீட் பெல்ட் போடாத கால் டாக்சி காரனை மிக மோசமாக அடித்து அவமான படுத்தி அவன் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தான்.
இன்னொரு போலீஸ் காரன் ஹெல்மெட் போடாம போனவனை லத்தியால கிரிக்கெட் அடிப்பது போல அடிச்சி மண்டையை உடைத்தான்
இப்போ ஒரு போலீஸ் வண்டில பெண்வங்களை எட்டி உதைச்சு கொலையே பன்னிட்டான்.
தெரியாம தான் கேக்கறேன் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வாகனம் ஓட்டினால் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி தான் போட சொல்றிங்க. அதை அணியாமல் போனால் அந்த உயிர் ஆபத்தை போலீஸ்ஸே ஏற்படுத்துவார் என்பது என்ன நியாயம் ??
ஹெல்மெட் போட்டு உன் உயிரை காப்பாத்திக்கொ இல்லேன்னா நாங்களே கொல்லுவோம் என்று காவல் துறை களம் இறங்கி இருப்பது அபாயமான சூழ்நிலை.
பொது மக்களுக்கு ஒரு புறம் சங்கிலி பறிப்பு ரௌடிகளால் ஆபத்து என்றால் இன்னோரு புறம் போலீஸ் காரங்களால் ஆபத்தாக இருக்கிறது . தமிழகம் அமைதியான மக்கள் வாழும் சுழல் இல்லாத நிலையை அடைந்திருப்பதாகவே அச்சப்பட்ட வேண்டி இருக்கிறது.
காவல் துறையின் இந்த இரக்கமற்ற போக்கிற்கு அரசு அவர்களுக்கு நிர்ணயிக்கும் நியாயமற்ற ‘டார்கெட்’ ஏதாவது காரணமாக இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.