மகளிர் தினத்தில் நடந்த மகளின் காதல் திருமணம்: ‘ஓகே’ பார்த்திபன்

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சென்னை

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், தன் மகள் கீர்த்தனாவின் திருமணத்தை மகளிர் தினமான இன்று (மார்ச் 8) சென்னையில் நடத்தியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் கீர்த்தனா. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.

நடிகர் பார்த்திபன் எல்லாவற்றிலும் வித்தியாசமானவர். வித்தியாசத்தை சொல்லிலும் செயலிலும் காட்டிக் கொண்டு வருபவர். தன் மகளின் திருமணத்திலும் அந்த வித்யாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கும், தேசிய விருது பெற்ற பிரபல எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய்க்கும் திருமணம் நடைபெற்றது.

மகளின் காதல் திருமணத்தை ஏற்ற பார்த்திபன் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களையும் திருமணத்திற்கு அழைத்திருக்கிறார். மகளிர் தினத்தில் மகளின் காதல் திருமணத்தை ஏற்று நடத்தி வைத்துள்ளார் பார்த்திபன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.