Homeஉரத்த சிந்தனைதமிழகம் திராவிடத்தின் பிடியில் இருந்து விடுபடும் நேரம்!

தமிழகம் திராவிடத்தின் பிடியில் இருந்து விடுபடும் நேரம்!

பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு வன்முறையில் ஈடுபடும் ரவுடித் தனத்தை வளர்த்து விட்டுள்ள திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் இருந்து தூர எறியப் படும் நேரம் வந்து கொண்டிருக்கிறது. மக்கள் மனத்தில் அத்தகைய வெறுப்பு உணர்வு வளர்வதற்கு உறுதுணையாக காட்சி ஊடகங்களே  அந்தப் பணியைச் செம்மையாகச் செய்து வருகின்றன.

சிலை அரசியலைக் காரணம் காட்டி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் அப்பாவி பிராமணர்களிடம் கத்தியைக் காட்டி, உயிர் பயத்தை ஏற்படுத்தி, பூணூலை அறுக்க முயன்று, அறுத்து அராஜகங்களில் ஈடுபட்டிருக்கிறார்கல் திராவிடர் கழக குடும்ப அமைப்புகளைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் 8 பேர். அவர்களில் 4 பேர் தாங்களாகவே பெருமித உணர்வுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார்கள்..

tpdk members - Dhinasari Tamil

இந்த நிலையில், இந்தச் சூழலின் கொடூரத்தை விளக்குகிறார் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியன். அவர் தனது முகநூல் பதிவில் இவ்வாறு எழுதியுள்ளார்…

மதியத்திலிருந்து மனசுக்குள் குமைந்து கொண்டிருக்கிறேன். கோபத்தை அடக்கப் படாத பாடு படுகிறேன். இன்றைக்கு வீட்டுக்கு சின்னப் பெண், மாப்பிள்ளை சம்பந்தி எல்லாரையும் சாப்பிடக் கூப்பிட்டிருந்ததால் காலையிலிருந்து படு பிசி.

மதியம் ஸாதிகாவைத் தூக்கம் செய்து கொண்டிருந்த போது வித்யா போன் செய்து அந்த விஷயத்தைக் கூறியதும் அதிர்ந்து போனேன். அடி வயிற்றிலிருந்து திகு திகுவென்று எரிந்தது.

என் சின்ன அக்கா (இப்போது உயிருடன் இல்லை) அவளுக்கு ஒரே பிள்ளை. பி.எஸ்.சீனியர் செகன்டரியில் யு கே.ஜி. படித்துக் கொண்டிருந்த பிள்ளையை சட்டென ஒரு முடிவெடுத்து பள்ளியிலிருந்து நிறுத்தி வேதபாடசாலையில் சேர்த்தாள். அவள் புகுந்த வீட்டின் மூன்று தலைமுறைக்கு முந்தைய தாத்தா கனபாடிகளாக இருந்தவர். பிள்ளையை வேத பாடசாலையில் கொண்டு விட்டதற்கு அவள் சொன்ன காரணம், “நாலு தலைமுறைக்கு முன்னாடி வேதம் சொன்ன வீடுதானே இது. நாமளே அதை விட்டு விலகிட்டா எப்டி? அதுவும் உயர்ந்த படிப்புதான். அதுலயே கணக்கு, விஞ்ஞானம், தத்துவம், வான சாஸ்திரம் எல்லாமே இருக்கே”. என்றாள்.

ஊர் விட்டு ஊர் சென்று ஏழு வயசு பிள்ளையை (கவிதாவை விட ஒரு வயது பெரியவன்) குருகுலத்தில் சேர்த்தாள். அங்கே, தானே குளித்து, தானே துவைத்து, தாய் தந்தையைப் பிரிந்திருந்து, வேதம் பயின்றது. பிறகு சென்னையில் வேத பாடம் தொடர்ந்தது. தற்போது இருப்பதும் சென்னையில்தான். பொதுவாகவே எல்லா பிராமணர்களையும் போலத்தான் எங்கள் குடும்பமும், யார் வம்புக்கும் போக மாட்டோம், எங்களிடம் யாரேனும் வம்பு செய்தால் கூட, ஓடி ஒளிவோமே தவிர, போலீஸ் ஸ்டேஷன் வாசற்படியை மிதித்ததில்லை. துஷ்டரைக் கண்டால் தூர விலகி விடு என்பதே எங்களுக்கு சொல்லப்பட்ட பாலபாடம்.

அப்படி வேதம் பயின்று தன் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் என் அக்கா பிள்ளையை இன்று காலை பெரியாரிஸ்ட்டுகள் நாலு பேர் கத்தியும் கபடாவுமாக நெருங்கி அவன் பூணூலை அறுத்து குடுமியை அறுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவன் போட்ட கூச்சலில் நாலாபுறமிருந்தும் ஆட்கள் ஓடிவர பயந்து விட்டு விட்டுச் சென்றிருக்க்கிரார்கள்.

இத்தனை நடந்தும் போலீசுக்குச் செல்ல அவர்கள் பிரியப்படவில்லை. அதுதான் பழக்கமில்லையே. பயந்து போயிருக்கிறார்கள். அடுத்த வாரம் அவனது ஐந்து வயசு பிள்ளைக்கு உபநயனம் செய்யவிருக்கிறான். இந்நிலையில் இது நடந்துள்ளது.

ஏன் ஏன் இப்படி? நாட்டில் எது நடந்தாலும் அப்பாவி பிராமணர்கள் மீதுதான் உங்கள் வீரத்தைக் காட்டுவீர்களா? எவனோ ஏதோ சொன்னான் என்றால் தெருவில் போகிற வருகிற அந்தணர்களின் பூணூலை அறுப்பீர்களா? தவறு செய்வது ஒருவன், தண்டனை இன்னொருவனுக்கா? என்ன நியாயம் இது? இதுதான் பகுத்தறிவா? இதுதான் பெரியாரின் கொள்கை என்றால் அந்தக் கொள்கையை நான் வெறுக்கிறேன். போலீசுக்குப் போகவில்லையே தவிர அவர்கள் வயிரெறிரிந்து சபிக்காமலா இருந்திருப்பார்கள்!

போங்கள், போய் வங்கியை ஏமாற்றுகிறவனை, ஊழல் செய்பவர்களை, நாட்டைச் சுரண்டுகிறவர்களை எல்லாம் அழைத்து மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீது உட்கார வைத்து ஊர்வலம் அழைத்துச் சென்று உங்கள் பகுத்தறிவைக் காட்டுங்கள்.

இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரின் சார்பிலும்தான் இப்பதிவு. மனசு ஆறவில்லை. ஏன் இப்படி இருக்கிறது தமிழ்நாடு. திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து என்று விடுதலை?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,141FansLike
376FollowersFollow
66FollowersFollow
74FollowersFollow
2,833FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...