சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு!

Published:

tamilnaducorona
tamilnaducorona

சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட 56 வயது பெண் உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை நேற்று வரை உயிரிழப்பு எண்ணிக்கை 40ஆக இருந்த நிலையில், இன்று காலை இருவர் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்தது.

இன்று காலை புள்ளிவிவரங்களின் படி, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,10,537ஆக உயர்ந்துள்ளது! உலக அளவில், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,75,959ஆக உயர்ந்துள்ளது. அதே போல், வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,82,344ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் மேலும் 29,043 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதி்ப்பு 13,21,666ஆக உயர்வு கண்டுள்ளது அமெரிக்காவில், கொரோனாவுக்கு மேலும் 2,671 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 78,599ஆக உயர்ந்தது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Related articles

Recent articles

spot_img