இனி திருமணங்களில் குறைந்த செலவில் ஹெலிகாப்டர் பவனி! அசத்திய குட்டு ஷர்மா!

nano - 2026

திருமண விழாக்களில் ஏதாவது புதுமையைப் புகுத்தி வைரலாவதுதான் இப்போதைய ட்ரெண்ட்.

அண்மையில் ஒரு திருமண விழாவில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, மணமக்களை அழைத்து வந்த சம்பவம் பற்றி எல்லோருக்கும் தெரியும்.

அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் திருமண ஊர்வலங்களில் ஹெலிகாப்டர் பவனி மேற்கொள்ளமுடியாது.

அப்படி ஓர் ஆசையைப் பூர்த்தி செய்ய, செலவு குறைவான வழி ஒன்றையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பீகார் மாநிலத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் விலை மலிவாக ஹெலிகாப்டரில் மணமக்களைப் பறக்க வைக்கலாம். ஆனால், இது ஒரு ‘Man Made Car’ ஹெலிகாப்டர்.

மக்களின் கனவை நினைவாக்கும் விதமாக தனது நானோ காரை ஹெலிகாப்டர் வடிவில் மாற்றி திருமண ஊர்வலங்களுக்குப் பயன்படுத்திவருகிறார் பீகாரைச்சேர்ந்த இளைஞர் ஒருவர்.

இந்த ஹெலிகாப்டரைத் தயாரித்திருக்கிறார் பீகார் மாநிலம் பகாஹா நகரில் வசிக்கும் ஒரு மெக்கானிக். இவர் ஹெலிகாப்டர் ஆக்கியிருப்பது, ஒரு டாடா நானோ கார்!

ஏற்கெனவே இந்தியாவின் விலை குறைந்த காராக அறிமுகமான டாடா நானோ பல குடும்பங்களின் முதல் காராக ஆகிப்போனது. பின்னர், அதன் விற்பனை குறைவானதால், அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

தற்போது இந்தியாவின் விலை மலிவான, ஹெலிகாப்டர் காராகவும் நானோ மாறியிருப்பது செம ட்ரெண்டிங்காக இருக்கிறது.

இதைத் தயாரித்திருப்பவர் குட்டு ஷர்மா என்ற மெக்கானிக். ஹெலிகாப்டர் என்றவுடன் ‘பட பட பட’ என்று 15,000 அடிக்கு மேல் பறக்கும் என்று கற்பனை செய்து விடாதீர்கள்.

இந்த ஹெலிகாப்டர் வடிவ நானோ, சாதாரண கார்போல தரையில்தான் செல்லும்; பறக்காது. திருமண விழாக்களில் பலர் தங்கள் புதிய மணமக்களை ஹெலிகாப்டரில் பிரமாண்டமான முறையில் அழைத்து வர விரும்புகின்றனர்.

ஆனால் அதற்கு நிறைய செலவழிக்க வேண்டி இருக்கும், சாமானிய மக்களால் அதைச் செய்ய முடியாது என்பதால் இவ்வாறு ஹெலிகாப்டர் வடிவ காரை தான் உருவாக்கியதாகக் கூறுகிறார் குட்டு ஷர்மா.

இந்த நானோ காரை ஹெலிகாப்டர் வடிவில் வடிவமைக்க உலோகப் பேனல்களைப் பயன்படுத்தியுள்ளார் குட்டு ஷர்மா. இதற்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை செலவானதாக கூறுகிறார் ஷர்மா.

மேலும் இந்தக் காரை பலர் தங்கள் திருமணத்திற்காக முன்பதிவு செய்துள்ளதாகவும் ஒரு திருமண விழாவிற்கு 15,000 ரூபாய் வரை வாடகை வாங்குவதாகவும் கூறுகிறார்.

ALSO READ:  T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

இது பற்றிக் கூறும் ஷர்மா, “டிஜிட்டல் இந்தியா காலத்தில், இந்தக் கண்டுபிடிப்பு தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு ஓர் உதாரணமாக இருக்கிறது. இதுபோன்ற ஹெலிகாப்டரைத் தயாரிக்க ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும்.

இன்னும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டால் இதைப் பல மேம்பட்ட வசதிகளைக் கொண்ட ஹைடெக் ஹெலிகாப்டராக மாற்றிவிடலாம்” என்கிறார்.

இதே போல் 2019-ம் ஆண்டில் மிதிலேஷ் பிரசாத் என்பவர் ஹெலிகாப்டர்களை வடிவமைக்க வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நிறைவேற்ற, தனது நானோவை ஹெலிகாப்டராக மாற்றினார் இதனை முழுவதும் முடிக்க 7 மாதங்கள் ஆகியுள்ளது.

பிரசாத் அதன் ரோட்டர்கள் மற்றும் பக்க பேனல்களில் வண்ணமயமான LED விளக்குகளையும் பொருத்தியுள்ளார் இதற்காக ரூ.7 லட்சம் வரை முதலீடு செய்தார். இந்தியாவைப் போலவே, சில ஜுகாடு மற்ற நாடுகளிலும் உள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த ஒருவர், உண்மையில் பறக்கும் ஹெலிகாப்டரை உருவாக்க ஸ்கிராப் செய்யப்பட்ட கார்களின் பாகங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

Topics

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Entertainment News

Popular Categories