
அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார் எனும் ரேஞ்சுக்கு, தமிழக பாடப் புத்தகங்களில் பெரியார் பெண்ணுரிமைக்காக குறல் கொடுத்தார், சாதி முறைக்கு எதிராகப் பேசினார் என்றெல்லாம் கடைந்தெடுத்த பொய்களை வலியத் திணித்து வைத்திருக்கிறார்கள் திராவிட இயக்கங்கள் தங்கள் ஆட்சிக் காலங்களில்!
இந்தத் தற்குறிகளின் வடிகட்டிய பொய்களை எல்லாம் வளரும் தலைமுறை தமிழ் மாணவன் படித்த் மூளை குழம்பி முட்டாளாக வேண்டியது தலை எழுத்தாகிவிட்டது. இன்று தமிழ் மாணவர்க்கு தமிழ் படிக்கவே திண்டாட்டம்! இதுவே அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட இயக்கங்களின் ஆட்சியின் சாதனை என்று தமிழ்ப் பெரியவர்கள் உள்ளம் நொந்து கூறுகிறார்கள்.
இப்போது, திராவிட இயக்கத்தின் மிச்சம் சொச்சமாகத் திகழும் திமுக.,வும் திக.,வும் சமூக வலைத்தளங்களால் சிக்கி சின்னாபின்னப் படுகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கேள்விக் கணைகள் பாய்கின்றன. இதற்குப் பதிலளிக்கத் தடுமாறுகிறார்கள் இவர்கள்.
இப்போது பஞ்சமி, மிஸா, அறிவாலயம் என்று வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகளினூடே, ஈ.வே.ரா குறித்து ராம்தேவ் கூறியதாகக் கூறப் படும் சர்ச்சைப் பேச்சு, அடுத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின்,
தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராகப் பேசினார்.
ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் பாதுகாக்கும் என்று டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இது அடுத்த கட்ட விவாதத்துக்கு நகர்த்தியுள்ளது.



