‘சூப்பர் ஸ்டார்’ ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
rajini speech kamal function 1 dvd.original 1 - 2026

இரு தினங்களுக்கு முன்பு கமலஹாசனின் 60ஆம் ஆண்டு திரையுலக பயணம் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் அந்த அதிசயம் நேற்று நடந்தது இன்றும் நடக்கிறது நாளையும் நடக்கும் என்ற ரீதியில் கிண்டலடித்து பேசியிருந்தார் … அவரது பேச்சு அரசியல் மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது அது அவர்களது அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் இன்று வெளிவந்திருக்கிறது

கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி ‘சூப்பர் ஸ்டாராவோம்’ என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்

முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் இன்று ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.