பாகிஸ்தானின் பரிதாப நிலை… சீனாவின் வரவேற்பில் இருந்து ..!

imran khan received in beijing - 2026பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வைச்சா சொந்தமில்லே பந்தமில்லே..

இம்ரான்கான் நிலைமையைப் பார்க்கும்போது இந்தப் பாடல்வரிகள்தான் ஞாபகத்துக்கு வருது. மனுஷன் என்னதான் பண்ணுவார்? என்னதான் பண்ண முடியும்?

தக்காளி பாகிஸ்தான்ல ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விக்குதாம். பெட்ரோல் டீஸல் விலை கேட்கவே வேண்டாம்.

ட்ரம்ப் என்னடான்னா, வாஷிங்டன் பக்கமே வராதேன்னு சொல்லிட்டாரு. சீனாவுக்குப் போனா, ஒரு பெரிய தேசத்தோட பிரதமரை வரவேற்க ஒரு கார்ப்பரேஷன் அதிகாரி வர்றாரு! இதெல்லாம் காறித்துப்புறதுக்கு சமானம்.

கடன் கொடுத்தவங்கல்லாம் ‘கையில காசு வாயிலே தோசை’ன்னு கண்டிப்பா சொல்லியாச்சு. சீனாவும் கடன் தர்றதைப் பத்தியெல்லாம் அப்பாலிக்கா பேசுவோம். வட்டியை எப்போ நைனா தரப்போறேன்னு கழுத்துல துண்டைப் போட்டுக் கேட்க ஆரம்பிச்சிட்டான். ஒரு முக்கியமான துறைமுகம் சீனா கைக்குப் போகப்போவுது. CPEC-க்குக் கொடுத்த கடனையெல்லாம் முதலீடாக (Equity) மாத்திக்கொடுன்னு ஒத்தக்காலுல நிக்கிறான் சீனாக்காரன்.

உலகப் பொருளாதார நிபுணர்களெல்லாம் ‘பாகிஸ்தான் ரூபாயோட மதிப்பைக் குறைக்கிறதைத் தவிர வேற வழியே இல்லை,’னு சொல்லிட்டாங்க. 1991-ல இந்தியா இதே மாதிரி சூழலில் இருந்தப்போ என்ன பண்ணினாங்கன்னு ஆராய்ச்சி பண்ணி, அதையெல்லாம் இப்ப பாகிஸ்தான்ல பண்றதுக்கு முயற்சி பண்ணிட்டிருக்காங்க. உதாரணம், பார்டிசிபேட்டரி நோட்ஸ். இந்தியாவுல கறுப்புப்பணம் அதிகரிக்கவும், சட்டவிரோதமான பணம் இந்தியாவுக்குள்ளே முதலீடா வர்றதுக்கும் காரணமாயிருந்ததும் இந்த எழவெடுத்த பார்டிசிபேட்டரி நோட்ஸ்தான். ஆனா, எதைத் தின்னா பித்தம் தெளியும்னுற நிலைமைக்குப் பாகிஸ்தான் வந்தாச்சு..

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

’காஷ்மீரை மறந்திட்டு, இந்தியா கிட்டே போயி, அவங்க எப்படி உலகத்துல 6-வது இடத்துக்கு வந்திருக்காங்கன்னு கேளுங்க,’ன்னு டிவியிலே ஷொட்டு வைக்கிறாங்க.imran khan beijing - 2026

‘சும்மா சும்மா இந்தியா கூட நம்ம நாட்டை ஒப்பிடாதீங்க. முதல்லே நேபாளம், அப்புறம் பங்களாதேஷ் அளவுக்கு வளர்ந்திட்டு அதுக்கப்புறம் இந்தியாவோட நம்மளை ஒப்பிடலாம்,’னு அங்கிருக்கிற பொருள்விளங்கா உருண்டைகள் டிவியிலே கலாய்க்கிறாங்க.

மோடிஜி வேற சும்மாயிருக்காம, சுஷ்மா ஸ்வராஜை விட்டு எல்லாருக்கும் லெட்டர் போட்டுக்கிட்டிருக்காரு. ‘இந்தாளுக்குக் கடன்கொடுத்துட்டு அப்பால அல்லாடாதீங்க,’ன்னு IMF-க்கு டெல்லி லெட்டர் போட்டாச்சு.

சாவப்போற நேரத்துல சங்கரா சங்கரான்னுறா மாதிரி இப்ப இம்ரான்கான் ‘ஆமாங்கோ, தெரியாத்தனமா இங்கன தீவிரவாதத்தை வளர்த்து விட்டுப்புட்டோம்,’னு ஒப்புதல் கொடுத்திருக்காரு. இதை ஐ.எஸ்.ஐயும் ராணுவமும் கேட்டுக்கிட்டு பல்லை நறநறன்னு கடிச்சிட்டிருக்கும். சரியான நேரம் பார்த்து அரசையே கவிழ்த்தாலும் கவிழ்த்திருவானுங்க.imrankhanin beijing - 2026

இதே இம்ரான்கான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘ நாம எதுக்குக் கடன் வாங்கணும்? என்ன வளம் இல்லை இந்த பாகிஸ்தானில்? நாம உலகத்துக்கே கடன் கொடுப்போம்.’னெல்லாம் டயலாக் பேசினாரு. ஆனா, இன்னிக்கு பாகிஸ்தான் திவாலாப் போறதுக்கு ரொம்ப கிட்ட வந்தாச்சு.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

பாகிஸ்தானைப் பார்த்து இந்தியா கத்துக்க வேண்டிய முக்கியமான பாடம் ரெண்டு இருக்கு.

  1. தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறியணும்.

  2. அரசியலுக்கு சம்பந்தமில்லாத துறையிலே வெற்றி அடைஞ்சவங்களை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைச்சா, அப்புறம் சிங்கியடிச்சிட்டு இருக்க வேண்டியதுதான்.

புரிஞ்சுக்கிட்டா பொழச்சுக்கலாம். அம்புட்டுத்தேன்.

–  யாரோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories