உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்!

Published:

cars petrol - 2026

உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லியில், கடந்த 1998-ம் ஆண்டு, தாஜ்மஹால் என்ற ஹோட்டலுக்கு சென்றவரின் கார் காணாமல் போனது. இது குறித்து காரின் உரிமையாளர் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தபோது, காரின் உரிமையாளருக்கு  2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஹோட்டல் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஹோட்டல் நிர்வாகம் நிவாரணம் வழங்க மறுத்ததால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய நுகவர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

supreme court of india - 2026

நமது வண்டிகளை திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் நிறுத்திவிட்டு செல்லும் பொழுது நமக்கு கொடுக்கப்படும், ரசீதுகளில் “வண்டி தொலைந்தால், அதற்கு நிறுவனம் பொறுப்பு ஏற்காது” போன்ற வாசகம் குறிப்பிட்டிருக்கும். ஆகவே, ஒரு வேளை அவர்களின் நிறுத்தத்தில் வண்டி தொலைந்து விட்டால், அவர்களை சட்டப்படி நாம் கேட்க இயலாது என்பதே நமது புரிதலாக இருக்கும்.

இதனை அடிப்படையாக கொண்ட ஒரு வழக்கில் நேற்றைய முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. வழக்கு என்னவென்றால், வாதிகள் இருவர், 1998ஆம் ஆண்டு தங்களது Maruti Zen காரில் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். பிறகு தங்களது காரின் சாவியினை கொடுத்து வாலட் பார்க்கிங் செய்துள்ளனர். அதன் பின்பாக, நிறுத்தப்பட்ட கார் திருடப்பட்டு விடுகிறது. ஹோட்டல் நபர்களிடம் கேட்டதற்கு, பார்க்கிங் ரசீதில் கொடுக்கப்பட்ட படி, “In the event of any loss, theft or damage, the management shall not be held responsible for the same and the guest shall have no claim whatsoever against the management.” திருடு போன காருக்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்று கூறி விடுகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

திருடு போன காருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்டஈடு கொடுத்து விடுகிறது. அதனை தொடர்ந்து, இன்சூரன்ஸ் நிறுவனம் ஹோட்டல் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நஷ்ட ஈடு கேட்டு மாநில நுகர்வோர் மன்றத்தில் வழக்கினை தொடுக்கின்றனர். மாநில நுகர்வோர் நீதிமன்றம் அவ்வழக்கில் ஹோட்டல் நிறுவனத்தினை ரூபாய் 2,80,000 நஷ்ட ஈடாக கொடுக்க உத்தரவு இடுகிறது, அதனை எதிர்த்து ஹோட்டல் நிறுவனர் தேசிய நுகர்வோர் மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார். அங்கும் மேற்கூறிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

அதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு வருகிறது, வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், எப்பொழுது ஹோட்டல் நிறுவனம் தனது வாடிக்கையாளரிடம் இருந்து காரை பெற்று கொண்டு, ரசீதை கொடுத்தார்களோ அப்பொழுதே நிறுவனத்திற்கும், வாடிக்கையாளருக்கும் இடையில் Bailment ஏற்பட்டு விட்டது. ஆகவே காரை, பொறுப்புடன் திருப்பி கொடுக்க வேண்டிய கடமை நிறுவனத்திற்கு வந்து விட்டது. ரசீதில், குறிப்பிட்டபடி அவர்கள் தங்களுடைய கடமையில் இருந்து எவ்விதத்திலும் தப்பித்து கொள்ள முடியாது என்று கூறி, வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டினை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

Taj Mahal Hotel vs. United India Insurance Company Ltd. (CIVIL APPEAL NO. 8611 OF 2019)

Related articles

Recent articles

spot_img