6 வயது சிறுமியை சாக்லேட் காட்டியே சீரழித்த 60 வயது மளிகைக்கடை ஹமீத் பகதூர் அன்சாரி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
child death e1563171535880 - 2026

6 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அப்துல் ஹமீத் பகதூர் அன்சாரி என்ற 60 வயது மளிகை கடை உரிமையாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை வினோபா பாவே காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் குர்லாவிலிருந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, குர்லாவில் மளிகைக் கடை வைத்திருக்கும் அன்சாரி, டிசம்பர் 1 முதல் சிறுமியை முட்டை வாங்குவதற்காக கடைக்குச் செல்லும் போதெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். ஒவ்வொரு முறையும் கடைக்குச் செல்லும்போதும் சாக்லேட்டுகளை வழங்குவதன் மூலம் அன்சாரி சிறுமியை கடைக்குள் வரவைத்துள்ளார்.

சிறுமி மீது பலமுறை பாலியல் அத்துமீறல் நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 3 ம் தேதி சிறுமி வயிற்று வலிக்கிறது என்று கூறியுள்ளார். அப்போது தனக்கு நடந்தவை குறித்து தனது பெற்றோருக்கு விளக்கமளித்துள்ளார்.

இதை அடுத்து அவரது பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகினர். மளிகை கடை உரிமையாளர் மீது புகார் கொடுக்க, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதே நாளில் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பிரிவு 4 (ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.