படித்து சிரிக்க பாகிஸ்தான் வீரர் கருத்து: இந்திய வீரர் பதிலடி!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
Abdul Razzaq - 2026

இந்திய அணி வீரர் பும்ராவை குழந்தை பந்துவீச்சாளர் என்று அப்துல் ரசாக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அப்துல் கூறியதை எல்லாம் படித்து விட்டு சிரித்து விடுங்கள் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

பும்ரா ஒரு பேபி பவுலர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் -ரவுண்டர் அப்துல் ரசாக் கூறினார்.மேலும் நான் விளையாடிய காலகட்டத்தில் பலவிதமான ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் பும்ராவின் பந்துவீச்சை மிகவும் எளிமையாக எதிர்கொள்வேன் என்று கருத்து கூறினார்.

bhumra - 2026

இவர் இவ்வாறு கூறியது இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்துலை கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து அவர் கூறுகையில், விராட் கோலி மட்டும் சச்சினை போல நல்ல மதிப்பெண்களை பெற்றுவருகிறார். ஆனால் விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் சச்சின் வேறு ,கோலி வேறு என்றும் தெரிவித்தார்.

irfanpadhan - 2026

இந்த கருத்து மேலும் இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பும்ராவை குறிவைத்து கூறியதற்கு இந்திய அணியின் ஆல் -ரவுண்டராக ஜொலித்த இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், இந்திய ரசிகர்களே இம்மாதிரியான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் .இந்த கருத்தை ஒதுக்குங்கள் . இவற்றை எல்லாம் படித்து விட்டு சிரித்து விடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.