இந்திய குடிமக்கள் என்பவர் யார்?

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
nrc - 2026

நாடு முழுவதும் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களின் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் சமூக ஊடகங்களில் தவறான மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது இதையடுத்து இஸ்லாமியர்கள் மத்தியில் கலவர எண்ணத்தை ஏற்படுத்திய நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்னாச்சி குறித்தும் தற்போது நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தி வருகிறார்கள்

இந்நிலையில் பீகாரில் இதனை அமல்படுத்தப் போவதில்லை என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தில் 2004-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தவிர, பிற இடங்களில் பெற்றோர் இந்தியராக இருந்தாலோ அல்லது சட்டவிரோத குடியேறியவர்களாகவோ இல்லாதபோது அவர்கள் இந்தியர்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தற்போது யார், யார் இந்திய குடிமக்கள் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், இந்தியாவில் 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந் தேதி அல்லது அந்த தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் அவர்களின் குழந்தைகள் ஞசட்டப்படி இந்திய குடிமக்கள் ஆவர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் 2019-க்காகவோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காகவோ கவலைப்பட தேவையில்லை… என்றார்.

குடியுரிமை விவகாரத்தில், ஆவணங்களை காண்பிப்பது தொடர்பாக எந்தவொரு இந்திய குடிமகனும் தேவையற்ற முறையில் துன்புறுத்தப்படவோ அல்லது சிரமத்துக்கு ஆளாக்கப்படவோ மாட்டார் என மத்திய உள்துறை அமைச்சகம் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.