கன்மேன்கள் இல்லாம வெளியே வாங்க பார்க்கலாம்: போலீஸ் அதிகாரிகள் சங்கம்!

இந்தியா லைஃப் ஸ்டைல்
IMG 20191220 WA0011 - 2026

ஜெசி திவாகர் ரெட்டி ஒரு ஜோக்கர். கன்மேன்கள் இல்லாமல் வெளியே வாருங்கள்… பார்க்கலாம்… போலீஸ் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.

ஜேசி திவாகர் ரெட்டி மீது ஆத்திரம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

கன்மேன்கள் இல்லாமல் வெளியே வர முடியுமா என்பதே கேள்வி. முன்பு கூட இதே போல்தான் வாயில் வந்ததை பேசினார். இப்போது என்ன ஆயிற்று?…. போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

முன்னாள் எம்பி திவாகர் ரெட்டியின் பரபரப்பு பேச்சு குறித்து போலீஸ் அதிகாரிகள் சங்கம் ஆத்திரமடைந்து எரிந்து விழுந்தது.

“போலீசாரைக் கொண்டு என் பூட்சை நக்க வைப்பேன்” என்ற விமர்சனம் மீது தீவிரமாக கருத்து தெரிவித்தது போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

பூட்ஸ்களை யார் நக்கினார்கள் என்பது அனந்தபுரம் மாவட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல மாநிலம் முழுவதும் அனைவருக்கும் தெரியும் என்று ஸ்டிராங் பதிலடி கொடுத்தனர் போலீஸ் அதிகாரிகள்.

முன்பு கூட இதே போல் போலீஸ் பற்றிய வாயில் வந்ததை பேசினார். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார். பதவி, வயது மறந்துவிட்டு பேசக்கூடாது என்றனர்.

ஜேசி பெரிய மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.

எல்லோரும் ஜேசியை ஜோக்கர் போல் பார்க்கிறார்கள். அவருக்கு பயப்பட்ட காலம் போய்விட்டது. கன்மேன்களை விடுத்து அவர் வெளியே வர முடியுமா ? என்று கேள்வி எழுப்பியது போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

பல ஆண்டுகளாக போலீசார் தான் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் என்ற விஷயத்தை அவர் மறக்கக்கூடாது. ஜேசி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அசோசியேஷன் தரப்பில் போராடுவோம் என்றனர் போலீஸ் அதிகாரிகள்.

திவாகர் ரெட்டி போலீஸ் குறித்து தரக்குறைவாகப் பேசிய போது அதே மேடையில் இருந்த சந்திரபாபு அவரை கண்டிக்காமல் இருந்தது வருத்தமளிக்கிறது. ஜேசி போலவே எங்களாலும் பேச முடியும். ஆனால் பெருந்தன்மையோடு இருக்கிறோம்.

போலீசுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது என்பதை கவனிக்க வேண்டும் . திவாகர் ரெட்டி இப்போதாவது தன் நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.