வன்முறையில் ஈடுபடுவோர் சொத்துக்களை முடக்க நடவடிக்கை!

Published:

yogiathi - 2026

உத்தரப் பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை முடக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லியில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

இந்தநிலையில், வன்முறையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அபராதத்தை வசூலிக்கவும், சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே லக்னோ மாவட்ட மேஜிஸ்திரேட் தலைமையில் 4பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு வன்முறையாளர்களை கண்டறிந்து சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related articles

Recent articles

spot_img