மகப்பேறு இல்லை! மனவருத்தத்தில் எடுத்த விபரீத முடிவு!

இந்தியா கிரைம் நியூஸ் பொது தகவல்கள்
thukku1 1 - 2026

புதுச்சேரியை அடுத்து நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி சாந்தினி. எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்த விஸ்வநாதனுக்கு, சாந்தினிக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதனால் பல்வேறு சிகிச்சைகள், கோவில், சாமி வழிபாடு என பலமுயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை.

இதனால் விஸ்வநாதன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். கவலை படாதீங்க, நமக்கு எப்படியும் குழந்தை பிறக்கும் என மனைவி பலமுறை கணவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

ஆனால், விரக்தியின் உச்சத்தில் இருந்த விஸ்வநாதன் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.