அடுத்த வாரம் முதல் பனி அதிகரிக்குமாம்!

Published:

Indian Meteorological Department - 2026

இன்னும் மூன்று நாட்களில் இந்த ஆண்டுக்கான பருவமழை காலம் முடிவுக்கு வருகிறது வரும் நாள்களில் பணி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

இந்தியாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதகாலம் தென்மேற்கு பருவமழை காலம். தொடர்ந்து அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை காலம் .

இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மழை பெய்கிறது … நாட்டில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி ஓர் ஆண்டு முழுவதற்குமான தண்ணீர் தேவை பூர்த்தியாகிறது

தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் காவிரி பாயும் மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழையாலும் மற்ற வடக்கு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையாலும் நீர்நிலைகள் நிரம்பும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 147 சதவிகித மழை பெய்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. உபரி நீர் கடலுக்குள் சென்றது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

பிறகு அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கம்போல் மழைப்பொழிவு இருந்தது.

இந்நிலையில் 17ஆம் தேதி முதல் உபரி மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் வரும் 31ம் தேதி நிறைவடைகிறது. ஜனவரி முதல் வட கிழக்குப் பருவக் காற்று விலகாவிட்டால் லேசான மழை மட்டுமே பெய்யும் .. பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்… என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய இடங்களில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவானது

இன்றும் நாளையும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலையே நிலவும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img