பிரியங்கா வத்ராவின் நாடகம்! முகத்திரையைக் கிழித்த காவல் அதிகாரி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
priyanka vadra1 - 2026

நேற்றைய இரண்டாவது அடிதடி: நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் பெற்ற ராபர்ட் வத்ராவின் மனைவி பிரியங்கா வத்ரா காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேசப் பொறுப்பாளராக உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் லக்னௌ நகரில் போலீஸாரோடு மல்லுக்கட்டி அதன் காரணமாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கலவரம் பாதித்த மக்களைப் பார்க்கப் போகிறேன் என்று பிரியங்கா கிளம்பி உபி தலைநகர் லக்னௌ சென்றார். அங்கே வழக்கம் போல பாதுகாப்பு காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்சிக்காரர் ஒருவருடன் ஸ்கூட்டியில் ஏறிப் பயணித்தார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.

இவர்களை வழியில் நிறுத்திய சர்க்கிள் ஆபீசர் அர்ச்சனா சிங் என்பவர் “இங்கே 144 தடை அமலில் உள்ளது, ஆகவே திரும்பிப் போங்கள்” என்று சொல்லியிருக்கிறார். “ஏய்! இவர் யார் தெரியுமா? பிரியங்கா காந்தி.” என்று வண்டியோட்டி சொல்லியிருக்கிறார்.

அதிகாரியோ “சட்டம் எல்லோருக்கும் தான். நீங்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் வண்டியில் வந்தது விதி மீறல். பாதுகாப்பு அதிகாரி அல்லாத ஒருவருடன் இந்த அம்மையார் வந்ததும் விதிமீறல். நான் போலீஸை உடன் அனுப்புகிறேன். திரும்பிப் போங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

up police archana1 horz - 2026

வண்டியில் இருந்து இறங்கிய பிரியங்கா, அதிகாரி அர்ச்சனா சிங்கைப் பிடித்துத் தள்ளிவிட்டு “எனக்கு சட்டம் சொல்லித் தருகிறாயா?” என்று சண்டைக்குப் போனார். பிற காவல்துறையினர் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

கட்சி அலுவலகம் வந்த பிரியங்கா தம்மை காவலர்கள் தாக்கியதாகவும், கழுத்தில் அடித்ததாகவும், பிடித்துத் தள்ளியதாகவும் கூறி யோகி போலீஸ் தம்மை கொடுமை செய்தது என்று பேசினார்.

ஆனால் காவல் அதிகாரி அர்ச்சனா சிங் நடந்த விவரங்களை விரிவாக எழுதி உயரதிகாரிகளுக்கு அனுப்ப அந்த அறிக்கையை உபி போலீஸ் பத்திரிகைகளுக்கு வெளியிட்டு உண்மையை வெளிக் கொண்டுவந்தது.

  • அருண்பிரபு ஹரிஹரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.