லோன் கிடைக்காத விரக்தி டிரைவா் மனைவியுடன் செய்த அதிர்ச்சி சம்பவம்.!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன் தமிழகம்
VESAM 2 3 - 2026

கோவை மாவட்டம் காளியண்ணன் புதூரை சேர்ந்தவர் கமல்ராஜ் (வயது 36). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ஜமுனா ராணி (30).

கமல்ராஜ்-க்கு ரூ.7 லட்சம் கடன் இருந்தது. இந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக லோனுக்கு விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் எதிர்பார்த்த லோன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக கமல் ராஜ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று கமல்ராஜ் வீட்டில் இருந்த போது கணவன்-மனைவிக்கு கடன் பிரச்னை தொடா்பாக தகராறு ஏற்பட்டது.

dead bady 10 - 2026

இதில் மனவேதனை அடைந்த கமல்ராஜ் பாலில் வி‌ஷத்தை ஊற்றி குடித்தார். இதனை பார்த்த ஜமுனா ராணி கணவரிடம் இருந்து வி‌ஷத்தை வாங்கி தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கினர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே கமல்ராஜ் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜமுனா ராணியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.