ரணகளமான ஆந்திரம்!தெனாலியில் பெரும் பரபரப்பு; அமராவதி ஜெஎசி முகாமுக்கு தீவைப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
andhrameet - 2026

அமராவதியே தலைநகராக இருக்க வேண்டும் என்று ரிலே உண்ணாவிரதத்தில் ல் ஈடுபட்டு வரும் ஜெஎசி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது எதிர்ப்பாளர்கள் கோழி முட்டையும் தக்காளிப் பழங்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல பெண்கள் காயமடைந்தனர்.

ஒய்சிபி கொடிகளை ஏந்தி சிலர் உண்ணாவிரத முகாமில் நுழைந்து அதனை தீ வைத்துக் கொளுத்தினார்கள். பின்னர் சாலையில் சந்திரபாபு நாயுடுவின் பொம்மையை செருப்பால் அடித்தார்கள். பின்னர் தீயிட்டு கொளுத்தினார்கள்.

மூன்று தலைநகர்கள் தொடர்பாக ஆந்திர பிரதேஷ் அரசியல் சூடாகி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, ஒய்சிபி கட்சி இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு எதிர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. குண்டூர் மாவட்டம் தெனாலி முனிசிபல் காரியாலயம் அருகில் தீவிர பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

andhra1 - 2026

அமராவதி ஜெஎசி ரிலே உண்ணாவிரத முகாம் அருகில் இரு வர்க்கத்தார் இடையே தகராறு மூண்டது. அமராவதிக்காக தீட்சை செய்து வரும் ஜெஎசி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது எதிர்ப்பாளர்கள் கோழி முட்டையையும் தக்காளிப் பழங்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தினார்கள்.

https://twitter.com/naralokesh/status/1221010108273979392

ஒய்சிபி கொடியை கையில் ஏந்திய சிலர் உண்ணாவிரதம் நடக்கும் முகாமுக்குள் புகுந்து அதனை தீவைத்துக் கொளுத்தினார்கள். முகாமின் எதிரில் ஒய்சிபி தலைவர்கள் மூன்று தலைநகர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டுக்கொண்டே மோட்டார்பைக்கில் சுற்றி வந்தார்கள். பின்னர் சாலை மீது சந்திரபாபுவின் திருஷ்டி பொம்மையை செருப்பால் அடித்தார்கள். அதற்கு தீவைத்தார்கள். தடுப்பதற்கு வந்த ஜெஎசி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதன் மூலம் இருவர்கத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் புகுந்து தகராறு செய்தவர்களை விரட்டி அடித்தார்கள். தெனாலியில் ஜெஎசி உண்ணாவிரத முகாம் மீது தாக்குதல் நடத்திய நிகழ்ச்சியை நாரா லோகேஷ் தீவிரமாக கண்டித்துள்ளார். விவசாயிகள் அமைதியான முறையில் தீட்சை நடத்திக் கொண்டிருந்த ஜெஎசி முகாமை ஒய்சிபி ரவுடிகள் எரித்தார்கள் என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

ஜெகன் செய்யும் பனையோலை சப்தங்களுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள் என்றும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நாசமாகிப் போவார்கள் என்றும் ஆத்திரப்பட்டார் லோகேஷ். அதோடு அந்த முகாமில் நடந்த காட்சிகளின் வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டார் நாரா லோகேஷ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.