கார்களை வாடகைக்கு எடுத்து தீவிரவாதிகளுக்கு சப்ளை! கேரளாவில் இலியாஸ் கைது!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
mohamed rafic - 2026

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்கு சொந்தமான காரை வாடகைக்கு விட 6 மாதங்களுக்கு முன் விளம்பரம் செய்தார்.

அதை கண்ட திருச்சூர் வாடானப்பள்ளியை சேர்ந்த இலியாஸ் என்பவர் அவரை அணுகி, காரை வாடகைக்கு எடுத்து சென்றார். பின்னர், தலைமறைவாகி விட்டார். இதனால் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனால் போலீசார் ஒரு கார் வாடகைக்கு இருப்பதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். அதனை பார்த்த இலியாசை அவர்களை தொடர்பு கொண்டு, ரயிலில் வந்தபோது காவல்துறையினர் அவரை பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது முக்கிய கூட்டாளி நிஷாத்தை கைது செய்தனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இவர்கள், தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனான முகமது ரபீக் என்ற தொப்பி ரபீக் என்பவருக்கு கேரளாவில் இருந்து 80க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரபீக்கை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.