டிக்கெட் வாங்குன்னு சொன்னதுக்கு… பெண் கண்டக்டரின் ட்ரெஸ்ஸைக் கிழித்து…. சித்தூரில் கொடூரம்!

இந்தியா உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
rtc conductor - 2026

டிக்கெட் வாங்கச் சொல்லி கேட்டதால் ஆண் பயணி, பெண் கண்டக்டருடைய உடையை கிழித்து…. சக பயணிகள் தடுத்தாலும் விடாமல் தாக்கிய பயணி.

குற்றவாளியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சகபயணிகள். சித்தூர் மாவட்டத்தில் இந்த கொடுமை நிகழ்ந்தது.

மதனப்பல்லி அருகில் ஆர்டிசி பஸ்ஸில் பெண் கண்டெக்டர் மீது நடந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதனப்பல்லி டிப்போவைச் சேர்ந்த பஸ், குர்ரம் கொண்ட, தரி கொண்டல என்ற இடங்களின் நடுவில் பயணித்துக் கொண்டிருந்தபோது செவ்வாயன்று பஸ்சில் பெண் கண்டக்டர் பணிபுரிந்து வந்தார்.

பஸ்சில் பயணிகள் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த போது சிவா ரெட்டி என்பவர் மட்டும் டிக்கெட் வாங்கிக் கொள்ளவில்லை. டிக்கெட் எடுக்காததால் கண்டக்டர் அவரிடம் ஏன் எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார். டிக்கெட் வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதனால் கோபத்தால் பொங்கி எழுந்த சிவாரெட்டி அவரைத் தாக்கத் தொடங்கினார். அதோடு நிறுத்தாமல் அவர் உடையைப்பற்றி கிழித்தார். பயணியின் தாக்குதலை கவனித்த சகபயணிகள் சிவா ரெட்டியை தடுக்க முயற்சித்தாலும் அவர் பின்வாங்காமல் பெண்ணென்றும் பாராமல் அவர் மீது கை வைத்தார். இறுதியில் பிற பயணிகள் அனைவரும் சேர்ந்து சிவாரெட்டியைப் பிடித்து அடித்து நொறுக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பெண் கண்டக்டர் வால்மீகிபுரம் போலீசாருக்கு புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அவருக்கு சிறிதளவு காயம் ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றார்.

கண்டெக்டர் மீது தாக்குதல் நடத்தியதால் ஆர்டிசி தொழிலாளர் சங்கங்கள் ஆத்திரமடைந்தனர். தாக்குதல் நடத்திய குற்றவாளி மீது கடின நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.