பறக்கணுமா? அதுவும் கார்ல… இந்தியாவுக்கு வந்த பறக்கும் கார்!

Published:

flying car - 2026

நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று, குஜராத்தில் பறக்கும் கார் தயாரிக்க உள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பறக்கும் காரை தயாரிக்கும், பிஏஎல்-v( personal airland vehicle) நிறுவனத்திற்கும், குஜராத் அரசிற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.

கார் தயாரிப்பு தொழிற்சாலை துவங்குவதற்கு தேவையான ஒப்புதலை பெறுவதற்கு, பிஏஎல் நிறுவனத்திற்கு,தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும்.இந்தியாவில் தயாரிக்கப்படும் பறக்கும் கார்களில் இரண்டு இன்ஞ்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

சாலையில், மணிக்கு 160 கி.மீ., வேகத்திலும், பறக்கும்போது மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும். கார் கிளம்பிய 3 நிமிடங்களில் பறக்க துவங்கும் இந்த கார்கள், பெட்ரோல் முழுவதும் நிரப்பப்பட்டிருந்தால் 500 கி.மீ.,தூரம் செல்லும். இது தொடர்பாக பிஏஎல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: உலக தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் எளிதாக தொழில் செய்யும் வசதி உள்ளதால், குஜராத்தை தேர்வு செய்துள்ளோம்.

இங்கு வணிக ரீதியிலான சிறந்த துறைமுகம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இதன் மூலம், இந்தியாவில் பறக்கும் கார் தயாரித்து பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக இருக்கும்.

ஏற்கனவே, 110 கார்கள் தயாரிக்க எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. இதனை இந்தியாவில் இருந்து தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

Related articles

Recent articles

spot_img