கொரோனா அச்சம்: எல்லைகளை மூடியது இந்திய அரசு!

Published:

china india border - 2026

அண்டை நாடுகளுடனான இந்திய நில எல்லை சீல் வைக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் உடனான நில எல்லை இன்று நள்ளிரவு முதல் சீல் வைக்கப் படுகிறது! கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அவசர நடவடிக்கையாக இதனை மேற்கொண்டுள்ளது.

பங்களாதேஷ், நேபாளம், பூடான், மியான்மர் போன்ற நாடுகளுடனான இந்திய எல்லைகள் கால வரையின்றி மூடப்படுவதாக, மத்திய அறிவித்துள்ளது.

பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள, கொரானாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

indo china border - 2026

அந்த வகையில் தற்போது இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், பூடான், மியான்மர் போன்றவற்றுடனான எல்லைகள், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் காலவரையின்றி மூடப்படுவதாகா அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் உடனான குறிப்பிட்ட எல்லைப்பகுதிகளையும் நாளை முதல் கால வரையின்றி மூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img