கொரோனா: சிகிச்சையின் போது தப்பி சென்ற கூகுள் ஊழியரின் மனைவி! இருக்கும் இடத்தை மறைத்த மாமனார் மீதும் வழக்கு பதிவு!

corono 1 3 - 2026

பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றக் குற்றத்துக்காக, அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவிய மாமனார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுநோய் சட்டம் 1897ன் கீழ், கூகுள் ஊழியரின் மனைவி மற்றும் மாமனார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ அவசர நிலையை கருத்தில் கொள்ளாமல், கட்டுப்பாடுகளைத் தாண்டி தப்பிச் சென்று பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைந்தக் குற்றத்துக்காக, அவரைக் கைது செய்து சிறைத் தண்டனை வழங்கும் வகையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாகத் திருமணமான கூகுள் ஊழியர், தனது மனைவியுடன், இத்தாலி நாட்டுக்கு தேனிலவைக் கொண்டாடச் சென்றார், அங்கிருந்து இந்தியா திரும்பியதும், இருவரும் கொரோனா அறிகுறிகளுடன் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மருத்துவப் பரிசோதனையில் கூகுள் ஊழியருக்கு மார்ச் 12ம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அப்பெண் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் இருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியேறி, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புது தில்லி சென்று தனது பெற்றோருடன் ரயில் மூலம் ஆக்ரா சென்றுள்ளார்.

அது மட்டுமல்ல, அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரை மருத்துவக் குழுவினர் அழைத்து வரச் சென்றபோது, அவர் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் இருந்துள்ளார். அங்கிருந்து வர அவர் மறுத்த நிலையில், மாவட்ட நீதிபதி தலையிட்டு, காவல்துறையின் உதவியோடுதான் அப்பெண்ணை மருத்துவர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

முன்னதாக, அப்பெண்ணின் தந்தையான ரயில்வே பொறியாளர், தனது மகள் எங்கிருக்கிறார் என்ற தகவலை அளிக்க மறுத்துவிட்டார். மருத்துவக் குழுவினர் அந்தப் பெண்ணை சோதித்ததில், அவருக்கும் கொரோனா பாதிப்பு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கூகுள் ஊழியரின் மனைவி மற்றும் மாமனார் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 269 (கவனக்குறைவாக செயல்பட்டு, தொற்று நோயைப் பரப்பி, உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல்), 270 (தனது மோசமான நடவடிக்கையால் தொற்றுநோயைப் பரப்பி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories