கொரோனா விழிப்புணர்வு: சச்சின் கூறியது என்ன?

இந்தியா பொது தகவல்கள் விளையாட்டு
sachin - 2026

‘கொரோனா வைரஸ் தீயை போன்றது. ஏற்கனவே வேகமாக பரவி வருகிறது. வீட்டை விட்டு வெளியே வந்து, இந்த தொற்றுநோய் கூடுதலாக பரவ ஆக்சிஜன் கொடுத்து விடாதீர்கள்,” என சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் மையம் கொண்ட கொரோனா வைரஸ், தற்போது புயல் வேகத்தில் உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஏப். 15ம் தேதி வரையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுகிறது.

ஆனால் பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என வீடுகளை விட்டு அடிக்கடி வெளியே வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இதை தடுக்க போராடி வருகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் வெளியிட்ட வீடியோ செய்தி: மத்திய, மாநில அரசுகள், உலகம் முழுவதும் உள்ள சுகாதார வல்லுனர்கள் என அனைவரும்,’ தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்,’ என மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் ஊரடங்கு விதிகளை பலரும் மீறி, வெளியே வருகின்றனர். கிரிக்கெட் விளையாடுவதற்கும், நண்பர்களை சந்திக்கவும் செல்கின்றனர். வேண்டாம் ‘ப்ளீஸ்’ உங்களின் இந்தச் செயல் தேசத்திற்குத் தான் பாதிப்பாக அமையும். இந்த ஊரடங்கு உத்தரவை விடுமுறை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கொரோனா வைரஸ் என்பது தீயை போன்றது. ஏற்கனவே வேகமாக பரவி வருகிறது. வீட்டை விட்டு வெளியே வருவதன் மூலம், இதற்கு நாம் ஆக்சிஜன் வழங்கி விடக் கூடாது. வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இது தான் ஒரே வழி. இந்த தொற்று நோய்க்கு எதிரான போரில் முன்னணியில் உள்ள அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்களை பாராட்டுகிறேன்.

இவர்கள் கொடுக்கும் அறிவுரையை பின்பற்றுவதால், நாம் அவர்களை கவுரவப்படுத்தலாம். இவ்வாறு சச்சின் கூறினார். 10 நாட்களாக… சச்சின் கூறுகையில்,”நானும், எனது குடும்பத்தினரும் கடந்த 10 நாட்களாக நண்பர்கள், உறவினர்களை சந்திக்கவே இல்லை. 21 நாட்களுக்கு இந்த சமூக விலகலை அவர்கள் பின்பற்றுவர் என உறுதி தருகிறேன்.

தற்போது கிடைத்துள்ள இந்த பொன்னான நேரத்தை, எல்லோரும் தங்கள் குடும்பத்துடன் செலவிடுங்கள்,” என்றார். தேசத்தை காப்பாற்றலாம் சச்சின் கூறுகையில்,”வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தால், உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம். நீங்கள் செய்யும் இந்த சிறிய செயலால் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், இந்திய தேசம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகையும் காப்பாற்றலாம்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.