கொரோனா பாதிப்பு 4421ஆக உயர்வு: நல்ல செய்தி- 326 பேர் குணமடைந்துள்ளனர்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
corona virus alert - 2026

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது இருப்பினும், நல்ல செய்தியாக 326 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்…

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் அதிகரித்து 4,421 ஆகஅதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 114 என உயர்ந்துள்ளது . கொரோனா தாக்கத்தில் இருந்து 326 பேர் குணமடைந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்ட தகவல்கள் இவை…

மகாராஷ்டிராவில் இதுவரை அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அங்கு 45 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
அடுத்து குஜராதத்தில் 12 பேரும், மத்தியப்பிரதேத்தில் 9 பேரும், தில்லி, தெங்கானாவில் தலா 7 பேரும், பஞ்சாபில் 6 பேரும், தமிழகம், கர்நாடகாவில் தலா 5 பேரும், ஆந்திரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசத்தில் தலா 3 பேரும், ஜம்மு காஷ்மீர், , கேரளாவில் தலா 2 பேரும், பிஹார், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

corona alert - 2026

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 748 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்! 56 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 பேர் குணமடைந்துள்ளனர்.,

தில்லியில் 523 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர், 19 பேர் குணமடைந்துள்ளனர்.
தெலங்காணாவில் 321 பேரும், கேரளாவில் 327 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 305 பேரும், ராஜஸ்தானில் 288 பேரும், ஆந்திராவில் 266 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 165 பேரும், கர்நாடகாவில் 151 பேரும் ,குஜராத் மாநிலத்தில் 144 பேரும், ஜம்மு காஷ்மீரில் 109 பேரும், மேற்கு வங்கத்தில் 91 பேரும், பஞ்சாபில் 76 பேரும், ஹரியாணாவில் 90 பேரும், பிஹாரில் 32, அசாமில் 26, உத்தராகண்ட்டில் 31, ஒடிசாவில் 21, சண்டிகரில்18, சத்தீஸ்கரில் 10, லடாக்கில் 14 பேரும்
அந்தமான் நிகோபர் தீவில் 10 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 13 பேர், புதுச்சேரியில் 5 பேரும், ஜார்க்கண்ட்டில் 4 பேரும், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவரும் என கொரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளனர் என்று, சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.