sectual workers - 2026

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், டி

தில்லியில் இருந்து, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுஉள்ளனர்.

3,000 பேர்ஊரடங்கு அமலில் உள்ளதால், தில்லியில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து, அனைத்து இந்திய பாலியல் தொழிலாளர்கள் அமைப்பின் தலைவர் குசும் கூறியதாவது: தில்லியில் இருந்து, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதாவது, தில்லியில் மொத்தமுள்ள, 5,000 பாலியல் தொழிலாளர்களில், 3,000 பேர் சென்றுவிட்டனர்.

உணவு, மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால், அவர்கள் இங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பாலியல் தொழிலாளர் பலருக்கு, எச்.ஐ.வி., தொற்று போன்ற நோய்கள் உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த, நாங்கள் இதுவரை எடுத்துள்ள முயற்சிகள், இனி பயன்அளிக்காது. உரிய சிகிச்சை இல்லை சொந்த ஊரில், அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்காது

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

அவர்களின் உடல்நலம் குறித்த கவலை அதிகமாக உள்ளது. பாலியல் தொழிலாளர்களின் இடம்பெயர்வு, தில்லியில் மட்டுமல்லாமல், பல நகரங்களிலும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் குமார் கூறியதாவது: தில்லியில் தற்போது உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருட்கள், மருந்துகள், முக கவசங்கள், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கி வருகிறோம். அவர்களுக்கு, எய்ட்ஸ் சிகிச்சை குறித்த அடிப்படை தகவல்களையும் அளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending