தில்லியில் ஏற்பட்ட தீ விபத்து!

இந்தியா பொது தகவல்கள்
fire

தில்லி கேசவ்புரம் பகுதியில் உள்ள ஒரு காலணி உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது,

இங்கு நள்ளிரவில் தீப்பிடித்ததால் பெரும் பதற்றம் உருவானது. காற்றில் மளமளவென தீ பரவியது. . இதனிடையே தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

fire

கேசவ்புரம் பகுதியில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கை தீயணைப்பு வீரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 23 தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்தில் உள்ளன.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் இறக்கி விடப்பட்டனர். . தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி, 4 மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இது ஒரு பெரிய தீ என்பதால் இழப்பை தற்போது சரிபார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.