suicidaldeath
suicidaldeath
  • இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்.
  • மணப்பெண் தற்கொலை.
  • கண்ணீர் வடிக்கும் பெற்றோர்.

தன் திருமணத்திற்கு செலவுக்காக கடன் வாங்க பெற்றோர் சிரமப்படுகிறார்கள் என்ற மனவேதனையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாள். இந்த சம்பவம் காமாரெட்டி மாவட்டத்தில் நடந்துள்ளது.

தெலங்காணா காமாரெட்டி மாவட்டம் லிங்கம்பேட்ட மண்டலத்தில் உள்ள ஐலாபூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஐலாபூர் கிராமத்தைச் சேர்ந்த பைடாகுல பாலையா, கங்காமணி தம்பதிகளின் மகள் மகேஸ்வரி (18) அண்மையில் இன்டர் பாஸானாள். மேற்படிப்பு படிக்க வைக்கும் வசதி இல்லாததால் அவளுக்கு திருமணம் செய்விக்க பெற்றோர் தீர்மானித்தனர். ஒரு இளைஞனோடு திருமணம் நிச்சயமானது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி திருமணத்திற்கு முகூர்த்தம் வைத்துள்ளார்கள். ஆனால் திருமண செலவுக்கு பணம் இல்லாததால் கடன் வாங்க எண்ணினார்கள். ஆனால் எங்குமே கடன் கிடைக்காததால் இந்த மாதம் 27ஆம் தேதி பாவையாவுக்கும் கங்காமணிக்கும் சண்டை தகராறு ஏற்பட்டது.

தன் திருமணத்திற்காக தன் பெற்றோர் படும் கஷ்டத்தை பார்த்து மனவேதனை அடைந்த மகேஸ்வரி சனிக்கிழமை பூச்சி மருந்தை குடித்து விட்டாள். அதை கவனித்த குடும்பத்தினர் அவளை காமாரெட்டி அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

நிலைமை சீரியசாக மாறியதால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பெறும்போது ஞாயிறு அன்று மாலை அவள் உயிரிழந்தாள்.

இளம்பெண்ணின் தாய் கங்காமணியின் புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending