கொரோனா: நடிகையும் எம்பியுமான சுமலதாவிற்கு தொற்று!

இந்தியா சற்றுமுன் சினிமா
sumalatha

‘‘கொரோனா நோயாளிகளை குற்றவாளி போல் பார்ப்பது தவறு,’’ என்று மக்களவை எம்பி.யான சுமலதா அம்பரீஷ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேஸ்புக் மூலம் கூறியதாவது:

ஜூலை  4 மண்டியாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அதேபோல்,  கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு  நடத்தினேன். பின்னர், வீட்டுக்கு வந்தபோது எனக்கு லேசான தலைவலி, தொண்டை  வலி ஏற்பட்டது. 

மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்ேடன்.  அப்போது, கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

கொரோனா  நோயாளிகளை சிலர் குற்றவாளிகள் போல் பார்ப்பது, அவர்களை சமூகத்தில் இருந்து  தள்ளிவைப்பது சரியில்லை. கொரோனா நோய் என்பது ஒரு யுத்தம் அதை எதிர்த்து  நாம் அனைவரும் ஒற்றுமையாக போராட்டம் நடத்த வேண்டும்.

கொரோனா  நோயாளிகள் 14 நாட்கள்  கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இது  நம்முடைய பொறுப்பும் கூட.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.