ராணுவத்தினரின் வீரம், தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது: மோடியின் கார்கில் வெற்றி தின வாழ்த்து

Published:

kargil 3 - 2026

புதுதில்லி:

ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது என்று கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டில், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன் பல்வேறு நட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே பஸ் சர்வீஸ், வாகா எல்லையில் கைகுலுக்கல், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ண ரயில் எனப் பேர் தாங்கிய சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் சர்வீஸ் பாகிஸ்தான் பிரதமருடன் தனிப்பட்ட நட்பு பாராட்டல் என்றெல்லாம் முயற்சி எடுத்து வந்த வேளையில், பாகிஸ்தானோ இந்தியாவின் முதுகில் குத்தும் வேலையில் இறங்கியது. அந்நாட்டின் அதிபராக இருந்த முஷாரப், இந்தியாவுக்கு வந்து, அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு நட்புறவு கொண்டாடியதை எல்லாம் மறந்தார். காஷ்மீரில் உள்ள இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரக்க வழிகோலினார்.

அப்போதுதான் இந்தியா முழித்துக் கொண்டது. கார்கிலை மீட்க இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின. அப்போது இரு நாடுகளுக்கும் இடையே கார்கில் பகுதியில் போர் நடைபெற்றது. 90 நாட்கள் நடந்த இந்தப் போரில், இந்தியா பல இழப்புகளைச் சந்தித்தும், வீரர்கள் பலரின் இன்னுயிரைத் தியாகம் செய்தும், இந்தியா வெற்றி பெற்றது.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப் படுகிறது. அவ்வகையில்  இன்று கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பிரதமர்  மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளதை நினைவுகூர வேண்டும். மக்களின் பாதுகாப்பு, மற்றும் நாட்டுக்காக துணிச்சலுடன் போரிட்டவர்களை நினைவுகூருங்கள்” என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று பல இடங்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தில்லி இந்தியா கேட் பகுதயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் ராணுவ அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் அருண் ஜேட்லி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

 

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img