குஜராத் எம்.எல்.ஏக்கள் ஆன்மிக சுற்றுலா வந்துள்ளனர்: கர்நாடக காங்கிரஸ்

Gujarat MLAs resort - 2026

பெங்களூர்:

குஜராத்தில் இருந்து பெங்களூருக்கு வந்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கர்நாடகத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா வந்துள்ளனர் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் தலைவர், சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். மேலும், பாஜக.,வுக்கு ஆதரவாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர். இதனால் அதிர்ந்த காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை தற்காத்துக் கொள்ள அவர்களை பெங்களூருவில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அக்கட்சி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி., டி.கே. சுரேஷ் இது குறித்து கருத்து தெரிவித்தபோது, இன்று காலை, குஜராத்தில் இருந்து எம்.எல்.ஏக்கள் வந்துள்ளனர் என்றும், அவர்கள் புனிதச் சுற்றுலாவுக்காக பெங்களூரு வந்ததாகவும் கூறினார். மேலும், “அவர்கள் கோயில்களை தரிசிக்க விரும்புகின்றனர். இன்று மாலை, அவர்கள் எங்கே செல்ல விரும்புகிறார்களோ அங்கெல்லாம் அழைத்துச் செல்லப் படுவார்கள். அதற்கு தகுந்த வகையில் அவர்களுக்கு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்” என்று கூறினார். பெங்களூரில் உள்ள ஈகில்டன் கோல்ட் வில்லேஜ் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர். ரிசார்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த சுரேஷ் இவ்வாறு கூறினார்.

எத்தனை பேர் இவ்வாறு வந்துள்ளனர் என்று சுரேஷ் தெரிவிக்காவிட்டாலும் கூட, 40 எம்.எல்.ஏ,க்கள் மற்றும் 3 மூத்த தலைவர்கள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், குஜராத் காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சைலேஷ் பார்மர், ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தாங்கள் 44 பேர் பெங்களூர் செல்ல உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

மேலும், குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, “பாஜக.,வினரால் எங்கள் உறுப்பினர்கள் மிரட்டப் படுகின்றனர். இங்கே இருந்தால் எங்களுக்குப் பாதுகாப்பில்லை. எனவே வேறு இடத்துக்கு செல்லவுள்ளோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இவ்வாறு வந்துள்ள தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை குஷிப் படுத்தும் படியான எந்த ஒரு உத்தரவும் தனக்கு கட்சி மேலிடத்தில் இருந்து வரவில்லை, அவர்கள் இயல்பாக வந்து தங்கியுள்ளனர் என்று சுரேஷ் குறிப்பிட்டார். மேலும், எத்தனை நாட்கள் அவர்கள் இங்கே தங்குவார்கள் என்று தனக்குத் தெரியாது என்றும், எப்போது அவர்கள் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதுவரை அவர்கள் இங்கே தங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார். ஆனால், மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்யும் ஆக.8ம் தேதி வரை அவர்கள் இங்கே இருப்பார்கள் என்று பேசப் படுகிறது.

51 பேர் கொண்ட குஜராத் காங்கிரஸ் உறுப்பினர்களில் 6 பேர், கடந்த 2 நாட்களில் ராஜினாமா செய்துள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் குஜராத் மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார். அவருக்கு 45 பேரின் ஆதரவு தேவைப் படுகிறது. ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகியதை அடுத்து, அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் படேலுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, 11 எம்.எல்.ஏக்கள், கட்சி மாறி பாஜக., குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத்துக்கு வாக்களித்தனர் என்பதால், காங்கிரஸ் தற்போது அச்சத்தில் உள்ளது.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

முன்னதாக, தமிழகத்தில் இதே போன்று, கூவத்தூரில் அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டபோது, அவர்களுக்கு குஷிப் படுத்தும் விதமான விருந்துகள் அளிக்கப்பட்டன என்பது நினைவுகூரத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories