13 வயது மகளை கட்டித்தரக் கேட்ட 55 வயது கட்டிட காண்ட்ராக்டர்! மறுத்த மேஸ்த்ரியின் மண்டையை பிளந்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ்
murder-2-1

தில்லியில் நரேலா என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் அர்ஜுன்சிங். இவர் ஒரு கட்டிட காண்ட்ராக்டர் 55 வயதாகிறது. கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் அந்த பகுதியிலேயே ஒரு பங்களா கட்டி வருகிறார். அதனால் ஏராளமான கட்டிட தொழிலாளர்களும் இவரிடம் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த கட்டிட மேஸ்திரியின் மகளான் 13 வயது பெண்ணும் வேலை பார்க்கிறார்.

இந்த 13 வயது பெண் மீது 55 வயசு அர்ஜூனுக்கு ஆசை. ஒரு கட்டத்தில் தன் ஆசையை பொறுக்க முடியாமல், மேஸ்திரியிடமே சென்று 13 வயசு பெண்ணை தனக்கு கல்யாணம் செய்து தரும்படி கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மேஸ்திரி பில்டிங் காண்டிராக்டர் அர்ஜுனுடன் சண்டைக்கே போய்விட்டார். பிறகு அவரை துரத்தியும் அடித்தார் மேஸ்திரி.

அப்போதும் அர்ஜுன் அடங்கவில்லை. கட்டிடத்தில் வேலை பார்க்கும் வேறு சிலரிடம் சென்று, மேஸ்திரி மகளை கட்டித்தர சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். ஒருகட்டத்தில் மேஸ்திரி குடும்பத்துக்கு தானாக சென்று பண உதவிகளை செய்தார் அர்ஜுன்.

அர்ஜூன் மகளை மறந்துவிட்டார் போல என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில், மேஸ்திரியிடம் கல்யாண பேச்சை ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேஸ்திரி, உங்க வயசு என்ன, அந்த பொண்ணு வயசு என்ன, இனி இந்த பேச்சு வேணாம் என்றார்.

உடனே ஆத்திரம் அடைந்த அர்ஜுன், கீழே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மேஸ்திரி தலையில் ஒரே போடாக போட்டார். இதில் மண்டை பிளந்து அங்கேயே உயிரிழந்தார் மேஸ்திரி. தகவலறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்தி, அர்ஜுனையும் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.