கொரோனா: தடுப்பூசி 2 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி!

corona vaccine

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருக்றது.

மொத்தம் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்படிருந்தது. இதையடுத்து, மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி தரக்கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) சீரம் இன்டிடியுட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்ஒசி) சிறப்பு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு அடுத்தகட்டமாக செலுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளுக்கு பின்னர் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கும்படி சிடிஎஸ்ஒசி அமைப்பின் நிபுணர் குழு கடந்த 31 ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை வழங்கியது.

இந்நிலையில், சிடிஎஸ்ஒசி-யின் சிறப்புக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இந்திய சிரம் இன்ஸ்டிடியுட்டின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியின் மூலம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சோதனை முறையில் 2 மற்றும் 3 ஆம் கட்டமாக செலுத்தி தடுப்பூசி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைகிறதா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்த இறுதி கட்ட பரிசோதனையில் சிரம் இன்ஸ்டிடியுட் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,600 பேருக்கு சோதனை முறையில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories