spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ராமஜன்ம பூமி... அடிக்கல் நாட்டு விழா! இதுவரை கடந்து வந்த பாதை! அபூர்வ தகவல்கள்!

ராமஜன்ம பூமி… அடிக்கல் நாட்டு விழா! இதுவரை கடந்து வந்த பாதை! அபூர்வ தகவல்கள்!

- Advertisement -
ramartemple4

இன்று காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்குள்ளாக நம் வீடுகளில் ஸ்ரீ ராமபிரானின் படத்தின் முன் திருவிளக் கேற்றி பூஜை செய்வோம்.

குடும்பத்துடன் “ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயராம்” என்ற மந்திரத்தை 108 தடவை பாராயணம் செய்வோம். கோயில் திருப்பணி வெற்றிகரமா நிறைவுபெற பிரார்த்திப்போம்.

அயோத்தி ராமர் கோயில் சில சிறப்புகள்:

  • * கோயிலின் நீளம் 300 அடி, அகலம் 280 அடி.-
  • * கோயில் உயரம் 161 அடி, 360  தூண்கள்.
  • * ஐந்து கோபுரங்கள், மூன்று தளங்கள்
  • * கோயிலின் அஸ்திவாரத்திற்கு ஸ்ரீராம் என  எழுதப்பட்ட 2லட்சம் செங்கற்கள்  பயன்படுத்தப்படும்
  • * படிகளின் அகலம் 16 அடிகள் கோவில்  கற்களால் மட்டுமே கட்டப்படும்.
  • * இரும்பு, தாமிரம், மரம் , வெள்ளை சிமெண்ட் `  ஆகியவை பயன்படுத்தப்படாது.
  • * இதற்கான கற்கள் ராஜஸ்தானில் உள்ள பன்ஷி  மலைகளில் இருந்து கொண்டுவரப்படும்.
  • * 3.5 வருடங்களில் கட்டிமுடிக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
  • * கட்டுமான செலவு சுமார் 300 கோடி என  மதிப்பிடப்பட்டுள்ளது.
ramartemple3

ராம ஜன்மபூமியை மீட்க 1990ல் போராட்டத்தில் வி.எச்.பியின் பொதுச்செயலர் அசோக் சிங்கால் முன்னின்று நடத்தினார். போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தடியடியில் அவரது தலையில் அடிப்பட்டு ரத்தம் சிந்தியது. 

அயோத்தி கரசேவையில் இடிக்கப்பட்ட கட்டிடத்தின் மீது முதல் முதலில் காவிக்கொடி ஏற்றியவர்கள் ராம் கோத்தாரி மற்றும் அவரது சகோதார் சரத் கோத்தாரி. இவர்கள் இருவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

பகவான் ராமனுக்கு அர்ப்பணம் செய்ய இனி ஒரு மகன் இல்லையே என இவர்களது தாயார் வருந்தினார். 

ஸ்ரீராம ஜன்மபூமியில் ஆலயம்எழும்பிட பாஜகவின் அத்வானி அவர்கள் சோமநாதபுரத்தில் இருந்து அயோத்தியா வரை 1000கி.மீ ரதயாத்திரையை 1990 செம்டம்பர் 25ல் தொடங்கினார். இதனால் ராமர் கோயில் அமைய ஹிந்துக்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வு எற்பட வித்திடப்பட்டது.

1528 – பாபர் ராமர் படையெடுப்பில் ராமர் கோவில் அழிக்கபட்டு அங்கு ஒரு கட்டடம் கட்டப்பட்டது.

1853 – கோவில் மீட்பு போரட்டம் நடைபெற்றது, பல ஹிந்துக்கள் இதில் கொல்லப்பட்டனர்.

1859 – ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டடத்தில் சுவர் எழுப்பப்பட்டு இரு மதத்தினரும் வழிபட தற்காலிக ஏற்பாடு.

1949 – வழிபாட்டு இடத்தில் ராமர் விக்கிரகம் இருந்ததால் எதிர்ப்பு காரணமாக கட்டடம் பூட்டப்பட்டது.

1950 – ராமர் சிலையை அகற்றக்கூடாது என வழக்கு தொடுக்கப்பட்டது.

1959- நிர்மோகி அகாரா இடத்திற்கு உரிமை கோரியது.

1961 – சன்னி வக்பு வாரியம் இடத்திற்கு உரிமை கோரியது.

1986 – ஹிந்துக்கள் அங்கு வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

1990 – அத்வானி அவர்களின் ரதயாத்திரை.

1991 – உத்திரபிரதேச அரசு இடத்தைகையகப்படுத்தியது. அதை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டது.

1992 – டிசம்பர் 6 – சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டது.

2002 – அயோத்தியில் இருந்து திரும்பிய கரசேவகர்கள் பயணம் செய்த ரயில்பெட்டி தீக்கிரையாக்கப்பட்டது.

2003- கட்டடம் இருந்த இடத்தில் கோவில் இருந்ததற்கான சான்றை தொல்லியல்துறை உறுதி செய்தது.

2010 – நிர்மோகி அகாரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் இடத்தை சமமாக பிரித்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2011 – இந்த தீர்ப்பை எதிர்த்து இந்த அமைப்புகளின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

2019: ஜனவரி 8 – உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் குழு வழக்கை விசாரித்தது.

ஜனவரி 25 – வேறு ஒரு ஐந்து நீதிபதிகள் குழுவிற்கு வழக்கு மாற்றப்பட்டது.

மார்ச் 8 – மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. 

ஆகஸ்ட் 6 – உச்சநீதிமன்றம் வழக்கை தினம்தோறும் விசாரிக்க ஆரம்பித்தது.

ஆகஸ்ட் 16 – விசாரணை நிறைவடைந்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 8 – இடம் ராமருக்கே சொந்தம், அங்கு ராமர் கோவில் கட்ட தடை இல்லை என தீர்ப்பு வெளியானது.

ramartemple2

இதுவரை ராம ஜன்மபூமியை மீட்க 76 போர்கள்  நடைபெற்றன. அதில் ராஜா மெஹதாப் சிங், ராஜா ரணவிஜய் சிங், ராஜா சங்காராம் சிங் பண்டிட் தேவிந்தன் பாண்டே ராணி ஜெயராஜகுன்வாரி, ராணி ஜெயராஜகுமாரி என பல அரசுகள் தன் பல லட்சக்கணக்காண வீரர்களுடன் உயிர் தியாகம் செய்துள்ளனர். இதனைத் தவிர பொதுமக்கள், கரசேவகர்கள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் ராம ஜென்ம்பூமி அமைய தங்கள் இன்னுயிரை கொடுத்துள்ளார்கள்.

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு இன்று மக்களுக்கு வினியோகிப்பதற்காக 1,11,000 லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த லட்டுகள் ராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு இங்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும். இவை ஒரு பையில் ஒரு பெட்டி லட்டு, சால்வை மற்றும் ராமஜன்மபூமியின் வரலாறு அடங்கிய மூன்று புத்தகங்கள் என நம் தேசம் முழுவதும் உள்ள கோவில்கள், தூதரங்கள் என முக்கியஸ்தர்கள் பலருக்கும் அனுப்பிவைக்கப்படும்.

ராமனுக்கு கோவில் கட்ட 1989ல் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் நம் பாரதத்தில் இருந்தும் 17 நாடுகளில் இருந்தும் பூஜிக்கப்பட்ட செங்கற்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் முதல் புனித செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர் பீஹாரை சேர்ந்த ஹரிஜனத் தொண்டர் ராமேச்வர் செளபால்

ramartemple4

ராம ஜன்மபூமி மீட்பில் நம் தமிழகத்தின் பங்கு வரலாற்றில் பொறிக்கத் தக்கது. கோவையை சேர்ந்த சுவாமி பலராமாச்சாரி என்பவரின் தலைமையில் அக்பரை எதிர்த்து 20 போர்கள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக் கணக்காண தமிழர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தவிர கரசேவையில் கலந்துகொண்டவர்கள். பணம் பொருள் கொடுத்து உதவியர்கள் என பல்லாயிரம் பேர். இந்த வழக்கில் வாதாடி மூத்த வழக்கறிஞர் பராசரனும் அவருக்கு உதவிய திரு. வைத்தியநாதனும் தமிழர்கள்தான். 

மத்தியபிரதேசம் ஜபல்பூரை சேர்ந்தவர் 82 வயதான ஓய்வுபெற்ற சமஸ்கிருத ஆசிரியை ஊர்மிளா சதுர்வேதி. இவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டி 1992 முதல் 28 ஆண்டுகள் பால் பழம் மட்டுமே உணவாகக் கொண்டு விரதமிருந்து வருகிறார். கோயில் கும்பாபிக்ஷேகம் ஆகும் வரை விரதத்தை தொடர்கிறார் இந்த தாய். இவரை போன்ற நல்ல உள்ளங்களின் தியாகங்கள் என்றும் வீண்போவதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe