தமிழக ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட வாய்ப்பு

இந்தியா சற்றுமுன்

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக் காலம் முடிந்த பின்னர், மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள வித்தியாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2016 ஆகஸ்டில் இருந்து தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப் படாத சூழ்நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புக்குக் சரியான தீர்வு காண முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்நிலையில், உ.பி.யைச் சேர்ந்த பாஜக., மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டுக்காக சீனா சென்றுள்ளார். தொடர்ந்து அவர் மியான்மரில் பயணம் மேற்கொள்கிறார். அவர் நாடு திரும்பியதும் அடுத்த வாரம் இந்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.