‘காலமும் கணக்கும் நீத்த காரணன்’

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
pm modi - 2026

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அயோத்தியில் ஸ்ரீராம்பிரானுக்கு அமைய வுள்ள ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து பின்னர் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், கம்பராமாயணத்தின் வரிகளை எடுத்துரைத்தார்.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் கலாச்சார பெருமிதம் கொள்ளும் வகையில் பேசிய பிரதமர் மோடி, எல்லா மொழிகளிலும் உள்ள ராமாயாணத்தை சுட்டிக்காட்டி நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ராம நாமமே ஒரே உணர்வு… இந்த நிலமே ராம மயம் என்றார்.

அவரது நீண்ட உரையின் இறுதிப் பகுதியில் கம்ப ராமாயண புகழ் பெற்ற வரிகளைக் குறிப்பிட்டார்.

ராமரின் கீர்த்தியை ஹனுமன் ராவணனிடம் சொல்லும் சுந்தர காண்டப் பாடல்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும், கணக்கும், நீத்த காரணன்-கை வில் ஏந்தி,
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட்டு-அயோத்தி வந்தான்

ஆரம்பம், நடு, முடிவு என்ற மூன்று கூறுகள் இல்லாத, முக்காலங்களையும், அவற்றின் கணக்குகளையும் கடந்த மூலகாரணன்.

இவன்தான் சூலம் ஏந்திய சிவன். இவன்தான் சக்கரமும் சங்கும் கையில் கொண்ட திருமால். இவன்தான் கையில் கமண்டலத்தை ஏந்தியிருக்கும் பிரமன். தான் திருமாலாகத் தங்கியிருந்த ஆலிலையையும், பிரமனாகத் தங்கியிருந்த தாமரை மலரையும், சிவனாகத் தங்கியிருந்த கையிலையங் கிரியையும் விட்டுவிட்டு அயோத்தியில் வந்து பிறந்திருக்கிறான்…. இப்படி ராமன் மும்மூர்த்திகளின் ஒரே திருவுரு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.