ஆந்திரத்தில் கோயில் கட்ட… தெலங்கானா முதல்வர் நன்கொடை!

இந்தியா லைஃப் ஸ்டைல்
andhra temple kcr help - 2026

ஶ்ரீபொட்டி ஸ்ரீராமலு நெல்லூர் மாவட்டத்தில் நாயுடுபேட்டை மண்டலம் ஸ்வர்ணமுகி திவ்ய க்ஷேத்திரத்தில் வெங்கடேஸ்வர சுவாமி ஆலய நிர்மாணத்திற்கு தெலங்காணா முதல்வர் கே. சந்திரசேகரராவ், அவர் மனைவி ஷோபா தம்பதிகள் நிதி உதவியுள்ளார்கள்.

andhra temple kcr help1 - 2026

ஆலயத்தின் முன்புறத்தில் மகா ராஜ கோபுரம் மற்றும் கிழக்கு மாட வீதி கட்டுவதற்கு நன்கொடை அளித்துள்ளனர்.

சனிக்கிழமை அன்று ஆலயத்தில் பெருமாளின் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், இதர பூஜை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தேறின. இந்த நிகழ்ச்சியில் கேசிஆர் தம்பதிகள் பங்கு பெறுவதாக இருந்தது. ஆனால் கோவிட் நிபந்தனைகளின் காரணமாக அவர்கள் அதில் பங்கு பெறவில்லை. ஆலய நிர்வாகிகள் கேசிஆர் பெயர் பொறித்த கல்வெட்டை வெளியிட்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.