தமிழகத்தில் இன்று… 6,495 பேருக்கு கொரோனா; 94 பேர் உயிரிழப்பு!

Published:

கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 94 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் விடுபட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,62,133 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், 1,249  பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை அடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு  13472 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையை அடுத்து அதிக அளவாக கோவையில் 498 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் 419 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 293 பேரும்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 193 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்:

district wise corona status aug 30 - 2026

Related articles

Recent articles

spot_img