2016 செப்.24ல் தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும்: போப் பிரான்சிஸ் அறிவிப்பு

சற்றுமுன்

பாரிஸ்:

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். அவருக்கான இந்த புனிதர் பட்டம் வரும் 2016ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, வழங்கப்பட உள்ளது. இதனை கத்தோலிக்க செய்தித்தாள் ஒன்று செய்தியாக வெளியிட்டு உள்ளது.

யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரசா. 1910 ஆகஸ்ட் 27-ஆம் நாளில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயால் வளர்க்கப்பட்டார்.

1929-ல் இந்தியா வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்து, தொழு நோயாளிகளுக்கு `ப்ரேம் நிவாஸ்’ இல்லம் தொடங்கினார்.

மத்திய அரசு அன்னை தெரசாவுக்கு 1980-ல் `பாரத ரத்னா’ விருது வழங்கிக் கௌரவித்தது. அவரின் பணியைப் போற்றும் விதமாக உலக அமைதிக்கான நோபல் பரிசு (1979) அவருக்கு வழங்கப்பட்டது.

தெரசா 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் மரணமடைந்தார். 1962-ல் பத்மஸ்ரீ விருது, 1962-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான `ராமோன் மக்ஸேஸே’ விருது, 1971-ல் போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் `நல்ல சாமரித்தான்’ விருது, 1972-ல் சர்வதேச நேரு சமாதானப் பரிசு, 1976-ல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம் இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில், அவருக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டு, வரும் 2016ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி வழங்கப்பட உள்ளதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளதாக இத்தாலிய கத்தோலிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.