வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழி காட்டும் ஞான முத்துக்கள்!

Published:

self improvement - 2026

வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழி நடத்தும் ஞான முத்துக்கள்!

சோம்பலே எதிரி!

ஸ்லோகம்:
ஆலஸ்யம் ஹி மனுஷ்யானாம் சரீரஸ்தோ மஹான் ரிபு: !
நாஸ்த்யுத்யமஸமோ பந்து : க்ருத்வா யம் நாவசீததி !!

பொருள்:
நம் உடலில் வசிக்கும் பெரிய எதிரி நம் சோம்பேறித்தனமே! உடலை வருத்திப் பணிபுரியும் இயல்பை விடச் சிறந்த உறவு வேறொன்றுமில்லை. முயற்சி உடையவர் ஆபத்தில் சிக்கிக் கொள்ளமாட்டார்.

விளக்கம்:
மாணவன் ஆனாலும் தினக்கூலி செய்யும் பணியாளர் ஆனாலும் எப்போதும் சுறுசுறுப்போடு பணிபுரிந்து வர வேண்டும். இருக்கும் இடத்திலேயே சும்மா இருப்பது மிகப்பெரிய நோய். சோம்பலை எதிர்த்துக் கூறிய சுபாஷிதம் இது.

மகாபாரதத்தில் பீஷ்மர் சோம்பல் குறித்து சிறிய கதை ஒன்று கூறுகிறார். ஒரு ஒட்டகம் தன் கழுத்தை தேவையான அளவு நீட்டிக் கொள்ளும் வரத்தை இறைவனிடமிருந்து பெற்றது.

உட்கார்ந்த இடத்திலிருந்து நகராமல் உணவு தேடிக் கொண்டு காலம் கழித்தது. ஒரு நாள் மழையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு குகைக்குள் தன் தலையை நுழைத்தது. அங்கிருந்த நரிகள் அதன் கழுத்தைக் கடித்து தின்று விட்டன. ஒட்டகம் தன் சோம்பலால் உயிரை இழந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சோம்பல் குணம் மிகப்பெரிய பகைவன். முயற்சியோடு உழைக்கும் குணமே நம் உறவினன் என்று கூறும் சுபாஷிதங்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தில் நிறைய உள்ளன.

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img