நூறாவது நாளை கடந்த விஸ்வாசம்! இந்த வருட முதல் ஹிட் படம்!

சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்

viswasam pongal relese - 2026

அஜித் நடிப்பில் சிவா இயக்கிய விஸ்வாசம் சில திரையரங்குகளில் 100வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அஜித், நயன்தாரா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் வெளியான ‘விஸ்வாசம்’ தமிழ் சினிமாவின் இந்த வருட முதல் ஹிட் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

விஸ்வாசம் வெளியாகி 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #ViswasamGlorious100Days என்கிற ஹேஷ்டேக் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தையும் பிடித்தது.

விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் ரூ.140 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப் படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.