ராஜபாளையம் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள திராவிடர் கழக அலுவலத்தின் வாசலில் சிலை ஒன்று நிறுவப் பட்டுள்ளது. அந்தக் கரிய நிறக் கல்லை திராவிடர் கழகத்தினர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று அழைத்து, அதற்கு மாலை மரியாதைகள் எல்லாம் செய்து வந்தனர்.
இந்நிலையில், இன்று திடீரென அந்தக் கல் மீது மர்ம நபர்கள் சிலர் காவி நிற பெயிண்ட்டை ஊற்றிச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட சிலர், கருப்பு நிற உருவச் சிலைக்கு காவி அபிசேகமா என்று ஆச்சரியப் பட்டனர்.
இந்நிலையில், பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற திராவிட இயக்க உணர்வாளர்கள், வெறும் ஒரு கல் மீது காவி நிற பெயிண்டை யாரோ ஊற்றிச் சென்றதை அரசியலாக்கி, ஈ.வே.ராமசாமி நாயக்கரையே அவமதித்ததாக கொந்தளித்தனர். இதை அடுத்து அவர்கள் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.


