சந்தையில் கொரோனா சிறப்பு முகாம் நடத்த வேண்டும்! கோரிக்கை விடுக்கும் வழக்கறிஞர்கள்!

Published:

madurai crowd1
madurai crowd1

வியாபார சந்தையில் கூடும் வியாபாரிகள், சிறு, குறு, சில்லரை வணிகர்கள், பொதுமக்கள் நலன்காக்கும் வகையில் சந்தையில் கொரெனா கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக முதல்வருக்கு பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரொனா என்ற ஆட்கொல்லி வைரஸை சமூக தொற்றாகாமல் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மொத்த காய்கறி சந்தையில் விவசாயிகள், மொத்த வியாபாரிகள், சிறு, குறு, சில்லறை வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி கொள்முதல் செய்து மாவட்டங்கள், மாநகரம் ,பேரூராட்சி, ஊராட்சி ,ஒன்றியம், பகுதி என பொதுமக்கள் இடையே அத்தியாவசிய அவசியப் பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்கள்.

மக்களுக்கான அத்தியாவசிய அவசியமான பொருட்களை கொண்டு வரக்கூடிய பெரும் பணியினை செய்து வரக்கூடிய வியாபாரிகள் ஒன்று கூடிய இடத்தில் வியாபாரிகள், வணிகர்கள் நலனையும், குடும்ப நலனையும், பொது மக்கள் நலனைக் காக்கும் வகையில் சுகாதார சிறப்பு முகாம் அமைக்க வேண்டுகின்றோம். மேற்கண்ட முயற்சியானது கொரானா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு எடுக்கும் சீரிய முயற்சியாக அமையும்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

எனவே விவசாயிகள், உள்ள மொத்த, சிறு, குறு, சில்லறை வணிக வியாபாரிகள், பொதுமக்கள் நலன் காக்கும் வண்ணம் வணிகர்கள் கூடும் சந்தையில் வியாபாரிகளுக்கு முகக் கவசம் ,கையுறை, கிருமிநாசினி திரவம் வழங்க வேண்டும். மேலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனையும் நடத்த வேண்டுமென பெற்றோர் அறக்கட்டளை
தி.ஜெயந்திராணி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை எம்.சித்ரா உள்ளிட்ட
பெண் வழக்கறிஞர்கள் தமிழக முதல்வர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • விஜய், திருச்சி

Related articles

Recent articles

spot_img