முஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்! புதுப்பொலிவுடன்!

Published:

srinagar-raghunath-temple
srinagar-raghunath-temple


ஸ்ரீநகரில் ஜீலம் நதிக்கரையில் ரகுநாத் மந்திர் என்ற புகழ் பெற்ற ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விரைவில் ஜீர்ணோத்தாரணம் நடை பெற உள்ளது. குலாப் சிங் மஹராஜா 1835ஆம் வருடம் இக்கோயிலைக் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி வேலை துவங்கியது.

காஷ்மீரில் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ரன்பீர் சிங் ஆட்சிக்காலத்தில் 1860 கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலில் ஸ்ரீ ராமர், சீதாதேவி, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.

1989-90களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வழக்கம் போல் வன்முறையைக் கையாண்டு, கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு, வீடுகளை தீ வைத்துக் கொளுத்தி ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசித்து வந்த ஹிந்துக்களை அங்கிருந்து அடித்து விரட்டினர். அப்போது ஸ்ரீநகர் ராகுநாத் மந்திரும் தாக்குதலுக்கு உள்ளானது.

     1989, 90, 91 & 92 என தொடர்ந்து இக்கோயிலின் மேல் தாக்குதல், துப்பாக்கிசூடு, தீவைத்துக் கொளுத்தினர். கோயில் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. ஸ்ரீ ராமர், சீதாதேவி விக்ரஹங்கள் ஜீலம் நதி யில் வீசப்பட்டது. 30 வருடங்களாக பூட்டப்பட்டுக் கிடந்தது.    

தற்போது அந்தக் கோயிலை ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு புதுப்பித்து ஜீர்ணோத்தாரணம் செய்வதற்கு ரூ.50 லக்ஷம் நிதி ஒதுக்கி மராமத்து வேலைகள் நடந்து வருகின்றது. விரைவில் ஸ்ரீநகர் ஜீலம் நதிக்கரை ராகுநாத் மந்திர் ஸ்ரீ ராமர் சீதாதேவி யுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க இருக்கிறார்.

அரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.

  • ராம்நாத்
ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Related articles

Recent articles

spot_img