பிரான்சில் இருந்து நாளை இந்தியா வந்து சேரும் 3 ரஃபேல் போர் விமானங்கள்!

Published:

rafale in india - 2026

நாளை பிரான்சில் இருந்து இந்தியா வந்து சேருகின்றன 3 ரஃபேல் போர் விமானங்கள்.

ரஃபேல் போர் விமானங்களை பிரான்சில் உற்பத்தி செய்யும் இஸ்ட்ரஸ் என்று இடத்திலுள்ள தொழிற்சாலையிலிருந்து குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு இடைநிற்றல் இன்றி பறந்து வந்து சேர உள்ளன. 3 புதிய ரஃபேல் போர் விமானங்களுடன் ஒரு பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானமும் தேவையான எரிபொருளுடன் பறந்துவரும்.

வானில் பறந்து கொண்டிருக்கும் போது மூன்று ரஃபேல் போர் விமானங்களுக்கும் தேவையான எரிபொருளை அந்த பிரான்ஸ் நாட்டு போர் விமானம் வழங்கும். மூன்று முறை ரஃபேல் போர் விமானங்களுக்கு அந்த பிரான்ஸ் நாட்டு போர் விமானம் பெட்ரோலை வழங்கும்!

rafale
rafale

கடந்த செப்.10 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிலிருந்து 5 ரஃபேல் போர் விமானங்கள் பறந்து வந்தன. அவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடையில் தரை இறங்கி எரிபொருளை நிரப்பிக் கொண்டு பறந்து வந்தன.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேரும். இதற்கான ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு கையெழுத்தானது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img