December 5, 2025, 1:34 PM
26.9 C
Chennai

திருமா மீது புகார் கொடுத்த அஸ்வத்தாமன் குறித்து… அள்ளிவிடும் அவதூறுகள்! உண்மை என்ன?

tamilisai ashwathaman
tamilisai ashwathaman

ஒரு மனிதனை சித்தாந்த ரீதியில் எதிர்க்க ஆண்மை இல்லாமல் , அவன் மீது ‘தனிமனித தாக்குதல்’ நடத்துவது பேடிகள் வேலை.

அப்படியான பேடித்தனங்களுக்கு பேர் போன ‘ விடுதலை சிறுத்தைகள்’ தன் தொப்புள்கொடி உறவான ஒரு அரசியல் கட்சியோடு கைகோர்த்துக் கொண்டு ‘அஸ்வத்தாமன்’ என்ற பாஜக பிரமுகருக்கு எதிரான அவதூறுகளை பரப்புகின்றன.

அவர் தன் மனைவியை வரதட்சணை கொடுமை செய்தார் என்றும், அவர் மீது 2007 ல் போடப்பட்டதாக சொன்ன FIR மற்றும்
அவர் வன்னியர் இல்லை, என்றெல்லாம் நாக்கூசாத அவதூறுகள்.

‘தனிமனித அவதூறுகளுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால், சித்தாந்த ரீதியில் பேச நேரம் இருக்காது ‘ என அஸ்வத்தாமன் இதை கடந்து சென்றாலும் , அவருடன் பிரச்சனை காலங்களில் நெருக்கமாக ஒரு உடன்பிறவா தம்பியாய் உடனிருந்தவனாய் என் மனம் கேட்கவில்லை……

ஒரு நல்ல மனிதனை , கேவலம் அரசியலுக்காக இப்படி கீழ்த்தரமான அவதூறுகளை பரப்பி , வீழ்த்தி விட நினைக்கும் , கழுதைப்புலிகளுக்காக இல்லை….என் மன நிறைவுக்காக நடந்த உண்மைகளை இங்கு பதிவிடுகிறேன்…..

அஸ்வத்தாமன் அவருக்கும், அண்ணிக்கும் இருதரப்பு பெற்றோர்கள் முன்னெடுத்து ‘நிச்சயதார்த்தம் ‘ நடந்தது.
Pure Arranged Marriage….. அதன்பிறகு , ‘தன்னுடைய உறவினர்கள் வழக்கறிஞர் என்றால் பெண் தரவேண்டாம் என்கிறார்கள் ‘என்று கூறி பெண் வீட்டார் கல்யாணத்தை cancel செய்தார்கள்.

தனக்கு நிச்சயமான பெண் என்பதாலும், அண்ணி உறுதியாக இருந்ததாலும் அஸ்வத்தாமன் அவரை அழைத்து வந்து, ‘ புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ‘ கல்யாணம் நடந்தது. அதன்பிறகு உளுந்தூர்பேட்டையில் RECEPTION நடந்தது. இது நடந்தது 2014ம் வருடம், பாஜக வின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு விமர்சையாக நடந்தது . பத்திரிக்கை வைத்தும் கோபத்தில் பெண் வீட்டார் கலந்து கொள்ளவில்லை.

அதன்பிறகு , அவருக்கு மூத்த மகன் பிறந்து 8 மாதங்கள் ஆனபிறகு , அண்ணி தன் தாய் வீட்டிற்கு போய் வருகிறேன் என அஸ்வத் அண்ணனிடம் கூற, அவரும் அனுப்பி வைத்தார். ஊருக்கு போன பிறகு அண்ணியிடம் இருந்து ஒரு தொடர்பும் இல்லை…..கேட்கப்போன உறவினரிடமும் சரியான பதில் இல்லை…..

பதறிப்போய் , எங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு பட்டுகோட்டை சென்றார் . அங்கு சில பல வாக்குவாதங்களால், பதட்டமான சூழ்நிலையும் , சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்துவிட்டது. ஆனால், கடைசி வரை அண்ணியையும், குழந்தையையும் கண்ணில் காட்டவில்லை.

ஒரு முறையாவது தன் மனைவியையும் குழந்தையையும் கண்ணில் காட்டுங்கள் என்று பட்டுக்கோட்டையில் உள்ள பெரிய மனிதர்கள் மூலமாக பேசிபார்த்தார் அஸ்வத்தாமன். பலனில்லை…. இதனால் வேறு வழியில்லாமல் தன் மனைவி , மகனை மீட்டுத்தருமாறு ஆட்கொணர்வு நீதிப்பேராணை HCP ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அஸ்வத்தாமன்.

தன் விருப்பமில்லாமல் அவர் அண்ணியை கல்யாணம் செய்து கொண்டதாலும், தன் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்து தன்னை அவமானப்படுத்திய கோவத்திலும் இருந்த அண்ணியின் அப்பா , அந்த HCP வழக்கை எதிர்கொள்ள , தனது வழக்கறிஞர் ஆலோசனைப்படி காவல்துறையில் கொடுத்தது தான் அந்த வரதட்சணை புகாரும், விவாகரத்து மனுவும் . அதை தாக்கல் செய்துவிட்டு , அதை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார் . அந்த வழக்கறிஞர் கூறியது படியே , உயர்நீதிமன்றமும் வழக்கை முடித்தது.

இந்த ஆணையைத்தான் அற்பப் பதர்கள் பகிர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள் . அந்த ஆணையில் அஸ்வத்தாமன் மீது ஒரு புகாரும் ஒரு divorce பெட்டிஷன் நிலுவையில் உள்ளது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நாக்கு கூசாமல் ‘ நிர்வாணமாக்கி தாக்கினார்’ ‘என்றெல்லாம் பகிர்ந்து வருகின்றனர் இந்த நயவஞ்சக நாதேரிகள்.

ஒரு கொள்கையும் புண்ணாக்கும் இல்லாமல், நாடக காதல், பெண்களுக்கு எதிரான சரக்கு மிடுக்கு மற்றும் ஆபாச பேச்சுகள் என ‘ பெண்களை பகடையாக்கி ‘ பொம்பள அரசியல்’ செய்யும் திருமாவளவனுக்கும், தன் எழுச்சி தலைவன் கவிதா என்ற பெண்ணை ஏமாற்றிய போது, அந்த பெண்ணிடம் தூது போன ( அந்த வீடியோவையே சவுக்கு சங்கர் வெளியிட்டார் ) வன்னிஅரசு என்ற பெயரை வைத்துக் கொண்டு இருப்பவருக்கும் , இதுபோன்று ‘#பொம்பள_அரசியல்’ செய்வதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டை விட்டு துரத்திய ஒரு மனிதன் , “மனைவியும் பிள்ளையும் மீட்டுத்தாருங்கள் ” என்று ஆட்கொணர்வு நீதிப்பேராணை ஏன் தாக்கல் செய்யப் போகிறான்?! என்ற அடிப்படை அறிவும் கூட இல்லாமல், அவர் மீது இருக்கின்ற வன்மத்தால் அந்தப் பதிவை பகிர்கின்றனர் சில விஷமிகள்.

இந்த HCP வழக்கு ஆணையை விடுதலை சிறுத்தைகளுக்கு எடுத்துக் கொடுத்த, அஸ்வத்தாமன் அண்ணனுடன் பழகி அவருக்கு துரோகம் செய்த துரோகிகள் , அதன்பிறகு இரண்டு ஆணைகள் அதே உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டதே , அதை எடுத்துக் கொடுக்க ஏனோ மறந்து விட்டார்கள்.

இந்த இரண்டு ஆணையையும் போட்டிருந்தால் உண்மையாக நடந்த கதை என்ன என்று தெரிந்து இருக்கும். அதாவது, மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு அஸ்வத்தாமன், மீண்டுமொரு ஆட்கொணர்வு நீதிப்பேராணை யை தாக்கல் செய்தார். அதில், ” நானும் என் மனைவியும் ஒற்றுமையாக இருந்தோம் எனவே என் மனைவி என் மீது புகார் அளித்து இருப்பதற்கோ அல்லது விவாகரத்து மனுதாக்கல் செய்து இருப்பதற்கோ வாய்ப்பு இல்லை . எனவே எதுவாக இருந்தாலும் என் மனைவி நேரடியாக உயர் நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகி சொல்லட்டும்”
என்று மனு அளித்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றமும் அண்ணி நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அடுத்த வாய்தா வில் உயர்நீதிமன்றத்தில் குழந்தையுடன் ஆஜரான அண்ணி, “அந்த வரதட்சணை புகாரையும், அந்த விவாகரத்து மனுவையும் நான் அளிக்கவில்லை ” என்று உயர்நீதிமன்றத்தில் தெளிவாக கூறியதோடு மட்டும் அல்ல….. அன்றைய தினமே, அண்ணனோடு வீட்டிற்கும் வந்துவிட்டார் .

அவர் மீது அவதூறு பரப்பும் பிரகஸ்பதிகள்,’ துர்கா VS அஸ்வத்தாமன் ‘ என்ற வழக்கை தேடி பார்க்கட்டும். அதில் தெளிவாக ‘ தான் அந்த விவாகரத்து வழக்கை பதியவில்லை’ என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து , பட்டுக்கோட்டையிலிருந்து அந்த விவாகரத்து வழக்கை சென்னைக்கு TRANSFER செய்து , ரத்தும் செய்துள்ளார் அண்ணி.

இது அஸ்வத்தாமன் அவர்களுக்கும், அவர் மனைவிக்கும் நடந்த பிரச்சனை அல்ல..,… அவருக்கும் அவரது மாமனாருக்கும் நடந்த பிரச்சனை. அதுவும் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு….

அவரின் மாமனார் பட்டுக்கோட்டை யில் little bird பள்ளியின் தாளாளர் . அவரிடம் வேண்டுமானால் , கேட்டுப்பாருங்கள், உங்கள் மாப்பிள்ளை உங்களிடம் ஒரு பைசா வரதட்சணை கேட்டாரா என்று , அவர் விருப்பமில்லாமல் கல்யாணம் நடந்ததாலும், அவர் வீட்டிற்கு சென்று நாங்கள் கலாட்டா செய்த கோபத்திலும், அவர் கொடுத்த புகார் தான் அது.

அண்ணி கோர்ட்டுக்கு வந்த ஆஜரான போது , சரியாக நூறாவது நாள். அண்ணன் தன் மனைவியையும், தன் பிள்ளையையும் பிரிந்து எவ்வளவு கஷ்டப்பட்டார் என அருகே இருந்து பார்த்தவன் நான். சாப்பிடாமல், தூங்காமல், கோர்ட் டுக்கு கூட போகாமல் , உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையில் கூட பட்டுக் கோட்டையிலேயே இருந்தார் . ராமன் தன் மனைவியை பிரிந்த போது உடனிருந்த லட்சுமணன் போல அந்த நூறு நாட்களும் உடனிருந்தவன் நான்.

அஸ்வத்தாமன் மீது வைக்கப்பட்ட அடுத்த அவதூறு , 2007 ல் போடப்பட்டதாக சொல்லப்பட்டுள்ள அந்த FIR. அந்த FIR ஐ படித்து பார்த்தாலே தெரியும் , அது Put-up case என்று .

அரியலூர் மாவட்டம் ,செந்துறை வட்டம் சேந்தமங்கலம், கிராமத்தைச் சேர்ந்த ஒரு வன்னியர் பெண்ணை ‘நாடக காதல்’ செய்து விடுதலை சிறுத்தை கட்சி காரர் ஒருவர் திருமணம் செய்தார். திருமாவளவன் தாலி எடுத்து கொடுத்து அந்த திருமணம் நடந்தது. அந்தப்பெண் வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்டு சென்னை ஆவடியில் உயிரோடு கொளுத்தப் படுகிறாள். இந்த ‘நாடக காதல் விவாகாரம்’ எல்லாம் வெளி உலக வெளிச்சத்திற்கு வராத காலகட்டம் அது. அந்த விசயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக அந்த பெண்ணின் சடலத்தை வாங்க மாட்டோம் என இறுதிவரை போராடினார் அஸ்வத்தாமன்.

அந்த காழ்ப்புணர்ச்சியில் போடப்பட்டது தான் மேற்சொன்ன
பொய்ப்புகார். அதனால்தான் , திருமாவளவனால் , DGP அலுவலகம் முன்பு கொடுத்த press meet ல் அந்த விவகாரம் குறித்து மனப்பாடமாக சொல்லமுடிந்தது.……

அடுத்த அவதூறு தான் , அதிக பட்ச காமடி , அஸ்வத்தாமன் வன்னியரே இல்லை என்பது….. அதைக் கூறுவது யார் தெரியுமா “சாதி ஒழிப்பே , people freedom” என்று சொல்லக்கூடிய சாதி ஒலிப்பு போராளிகள் ! …….

அவர் அப்பா வழி தாத்தா வினுடைய பேர் பரசுராமக்கவுண்டர் , ஊர் சேலம் மாவட்டம் ரெட்டியபட்டி (தௌளசம்பட்டி அருகே ), அந்த ஊரில் வன்னியர் சமுதாயத்தை தவிர எந்த சமுதாயமும் இல்லை ….இன்று வரை…. அம்மா வழி தாத்தா பெயர் கந்தசாமி கவுண்டர் , ஊர் புகைப்பட்டி ( உளுந்தூர்பேட்டை அருகே )

சாதி வெறி பிடித்த , சாதி ஒழிப்பு போராளிகள் verify செய்து கொள்ளுங்கள் ! Sorry அஸ்வத்தாமன் அண்ணா , மனசு கேட்கவில்லை …அதனால் பகிர்ந்து விட்டேன்……..

  • G.யுவராஜ், வழக்கறிஞர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories