திருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்!

Published:

tirupathi-entrance
tirupathi-entrance

திருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.

கோவிட் பரவல் காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் ஸ்ரீவாரு தரிசனத்திற்கு வாய்ப்பு அளிப்பது இல்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோவிட் காரணமாக 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் திருமலையில் ஸ்ரீவாரு தரிசனத்திற்கு வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால் புதிதாக அண்மையில் சோசியல் மீடியாக்களில் சில புகார்கள் சுற்றி வருகின்றன.

திருமலை ஶ்ரீவேங்கடேஸ்வர சுவாமி தரிசனத்திற்கு முதியோர் களுக்கும் தினமும் இரண்டு ஸ்லாட்டுகள் ஒதுக்கியுள்ளதாக செய்தி வைரலாகி வருகிறது. இந்த செய்தி  உண்மை அல்ல என்று தீதிதே தெளிவுபடுத்தியுள்ளது. பொய்ப் பிரச்சாரங்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதரிசனம் டோக்கென்கள் அளிக்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள  செய்தி அறிந்ததே. பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களின் வசதிக்காக  இந்த முடிவு எடுத்துள்ளது. இதுவரை பூதேவி காம்ப்ளக்ஸில் மட்டுமே சர்வ தரிசன டோக்கன்கள் கொடுத்து வந்தார்கள்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
tirupathi therottam
tirupathi therottam

புதிதாக விஷ்ணு நிவாசம் வசதிகிருகத்திலும் டோக்கன்களை கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் யாத்திரிகர்களுக்கு விஷ்ணு நிவாசத்தில் டோக்கன்கள் கொடுக்கிறார்கள். பக்தர்களின் கூட்டம் மற்றும் நோய்த் தொற்று காரணமாக சர்வதரிசன டோக்கன்களின் சென்டர்களை டிடிடி அதிகரித்துள்ளது.

விஷ்ணு நிவாவாசத்தில் 24 மணிநேரமும் சர்வதரிசனம் டோக்கன்களை அளிப்பதாக அறிவித்துள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை சர்வ தரிசன டோக்கன்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தது. 

தரிசன டிக்கெட்டுகள் உள்ளவர்களை மட்டுமே திருமலைக்கு அனுமதிப்பதால்… சர்வ தரிசனத்திற்கு தொடர்பாக ஒரு நாள் முன்பாகவே டோக்கன்களை கொடுத்து வருகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img